சூர்யவம்சம் படத்தில் வந்த இந்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? அட இந்த நடிகையா இவங்க

0
812
- Advertisement -

மா உலகில் உலகில் பிரபலமான படங்களில் ஒன்று சூர்ய வம்சம். இந்த படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார். இந்த படம் 1997 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

இன்றும் சூர்யவம்சம் படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. சூர்யவம்சம் படத்தை 90ஸ் ரசிகர்கள் நிச்சயம் மறக்க முடியாது. இந்நிலையில் இந்த படத்தில் சரத்குமாரின் முறை பெண்ணாக பிரியா ராமன் நடித்திருக்கிறார். அவரின் சிறு வயது கதாபாத்திரத்தில் குறிப்பாக ரோசா பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடலில் இடம் பிடித்திருக்கும் பெண்ணை குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அவர் வேறு யாரும் இல்லைங்க சீரியல் நடிகை நிவாசினி திவ்யா.

- Advertisement -

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சீரியலில் ஒன்று நீதானே எந்தன் பொன்வசந்தம். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவடைந்தது. மேலும், இந்த தொடரில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை நிவாஷினி திவ்யா. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு 2013 இல் சன் டிவியில் செல்லக்கிளி என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தார்.

இந்த தொடரின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை அடுத்து யாழினி என்ற சீரியலில் நிவாஷினி திவ்யா நடித்தார். பிறகு இவர் மரகத வீணை என்ற தொடரில் நடித்து இருந்தார். இந்த சீரியலில் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் சின்னத்திரையில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு மூன்று வருடங்கள் இவர் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார்.

-விளம்பரம்-

இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் சீரியல் மூலம் நிவாஷினி திவ்யா ரீ எண்ட்ரி கொடுத்து இருந்தார். மேலும், இவர் நடிகை மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அதாவது எஸ்டெல் என்டர்டெய்னர் சார்பில் சேவியர் பிரிட்டோவின் நிறுவனமும், இவரும் இணைந்து தான் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலை தயாரித்து இருந்தார்கள்.

பின் இவர் தேவையானி நடித்த புதுப்புது அர்த்தங்கள் தொடரின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது இவர் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நிவாசினி திவ்யா சூர்யவம்சம் படத்தில் தான் நடித்த காட்சி வந்தவுடன் அதனுடன் சேர்ந்து செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி .வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சூர்யவம்சம் பட நடிகையா இவர்! என்று பலர் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement