சூரரை போற்று படத்தில் அனைவரையும் கவர்ந்த பொம்மி – உன்மையான பொம்மியை பார்த்துள்ளீர்களா ? இதோ புகைப்படம்.

0
2021
Aparna
- Advertisement -

பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படமும் சாதனை படைத்த இந்தியர் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.

இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.இந்த படம் முழுக்க முழுக்க ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படம் ஆகும். தமிழில் இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான செயலாகும். இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். ஒரு சாதாரண மனிதன், அவனின் மலிவு விலை விமான டிக்கெட் கனவு, ஏர் ஒட்டுகிறவனும் ஏரோ பிளானில் பறக்க வைக்க வேண்டும் என்ற ஒரு லட்சியம்.

- Advertisement -

இது தான் சூரரை போற்று படத்தில் வரும் நெடுமாறனின் கதாபாத்திரம். சூர்யாவிற்கு நிகராக இந்த படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா முரளியின் நடிப்பும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. பல சிங்கிள்ஸ்களும் தங்களது வாழ்வில் பொம்மி போன்ற ஓரு குணம் கொண்ட பெண் தான் வேண்டும் என்று சமூக வலைதளத்தில் மீம்களை அள்ளி வீசி வருகின்றனர். இந்த படத்தில் பொம்மியாக நடித்த அபர்ணா முரளி, மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் . 2015-ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள திரைப்படம் ‘ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா’. இந்த படத்தினை இயக்குநர்கள் ஜெக்ஸ்சன் ஆண்டனி – ரெஜிஸ் ஆண்டனி இணைந்து இயக்கியிருந்தனர்.

இதில் அம்ரிதா உன்னி கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அபர்ணா பாலமுரளி. இது தான் அபர்ணா பாலமுரளி அறிமுகமான முதல் மலையாள திரைப்படம்.தமிழில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘8 தோட்டாக்கள்’. இந்த படத்தினை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக வெற்றி நடித்திருந்தார். வெற்றிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் நடிகை அபர்ணா பாலமுரளி தமிழ் சினிமாவில் என்ட்ரியான முதல் திரைப்படம். இப்படி ஒரு நிலையில் ஒரிஜினல் பொம்மி அதாவது இந்த படத்தின் ரியல் ஹீரோவான கோபினத்தின் மனைவியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement