-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

44 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் ரட்சகன் நடிகை.! மாப்பிள்ளை இவ்வளவு இளையவரா.!

0
22154
susmitha-sen

தமிழில் ரட்சகன், முதல்வன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை சுஸ்மிதா சென். பாலிவுட் நடிகையான சுஷ்மிதா இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய காதலர் ரிதிக் பாஸினை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for sushmita sen marriage

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் காதலை முறித்துக்கொண்டு பிரிந்து விட்டனர். மேலும், 44 வயதான சுஷ்மிதா சென் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் இருக்கு 44 வயதில் திருமண ஆசை வந்துள்ளது.

இதையும் பாருங்க : இவர் வெற்றி பெற வேண்டும்.! இவர் வெற்றி பெறவே கூடாது.! மீரா கொடுத்த பேட்டி.!

சுஷ்மிதா தற்போது Rohman Shawal என்ற மாடல் ஒருவரை காதலித்து அவருடன் அடிக்கடி டேட்டிங் செய்து வந்ததாக கடந்த சில காலமாகவே கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.

Related image
-விளம்பரம்-

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சுஸ்மிதா சென்னை விட அவர் திருமணம் செய்துகொள்ள உள்ள ரோஹமன் சுஸ்மிதாவை விட 14 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என கூறப்படும் நிலையில் , ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news