ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் லலித் மோடியுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து சுஸ்மிதா சென் பதிவிட்டு இருக்கும் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஷ்மிதா சென். இவர் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர். சுஷ்மிதா சென் தன்னுடைய கேரியரை மாடலிங்கில் தொடங்கினார். மேலும், யுனிவர்சல் அழகி(பிரபஞ்ச அழகி) என்ற பட்டத்தை 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிற்கு வாங்கி தந்தவர் சுஷ்மிதா சென். அதற்கு முன்பு இவர் மிஸ் இந்தியா என்ற பட்டம் வென்றார். இப்போட்டியில் ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1996 ஆம் ஆண்டு தஸ்தக் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு இவருக்கு தமிழில் படங்கள் சரியாக அமையவில்லை என்றவுடன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். பின் இவர் பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி விட்டார். பிறகு இவர் 2000ம் ஆண்டில் ரெனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார்.

Advertisement

இதையும் பாருங்க : லட்சக்கணக்கில் செலவு செய்து வீடு கட்டியிருக்கும் சின்னத்திரை ஜோடி. அதுவும் இதுக்காவா ?

டேட்டிங் புகைப்படங்களை பகிர்ந்த லலித் மோடி :

அதன் பின் 2010 அன்று அலிசா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது குறிப்பிடதக்கது. மேலும், சுஷ்மிதா சென்னுக்கு திருமணம் ஆகவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படி ஒரு நிலையில் பிரபல தொழிலதிரும் நிதி மோசடியில் சிக்கி லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி சுஸ்மிதா சென்னை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அவருடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.

Advertisement

விரைவில் திருமணமா ?

இதுகுறித்து பதிவிட்ட அவர் ‘இப்போதுதான் மாலத்தீவு உட்பட உலக நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் வந்திருக்கிறேன். என்னில் பாதியான(#betterhalf @sushmitasen47) சுஷ்மிதா சென் பற்றி இங்கு குறிப்பிடவில்லை.சுஷ்மிதா சென் உடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறேன். ‘ நிலவில் இருப்பது போல் உணர்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் செய்தியால் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனரா என கேள்வி எழுப்பியதால் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக அடுத்த ட்விட்டர் பதிவில் ‘நாங்கள்இன்னும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் அதுவும் நடக்கும். இப்போது இருவரும் டேடிங்கில்தான் இருக்கிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement

சுஸ்மிதா சென்னின் பதிவு :

லலித் மோடிக்கு 56 வயதாகிறது. சுஷ்மிதா சென்னுக்கு 46 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் சிஸ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் ’நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன், திருமணம் செய்யவில்லை, மோதிரங்கள் மாற்றவில்லை, எந்தவித நிபந்தனையுமின்றி அன்பால் சூழப்பட்டு இருக்கிறேன். ஏற்கனவே போதுமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது நான் மீண்டும் எனது அன்றாட பணிக்கு திரும்பியுள்ளேன்.

உங்கள் வேலை எதுவோ அதை பாருங்கள்

எப்போதும் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்பவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்களுக்கு NOYB (None of your business) உங்கள் வேலை எதுவோ அதை பாருங்கள்’ என்று பதிவிட்டு இருக்கிறார். சுஸ்மிதா சென்னின் இந்த பதிவை கண்ட பலரும் லலித் மோடியை சுஸ்மிதா சென் விரைவில் திருமணம் செய்யப்போகிறார் என்று கிளம்பிய சர்ச்சைக்கு தான் பதிலடி கொடுத்து இருக்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement