லட்சக்கணக்கில் செலவு செய்து வீடு கட்டியிருக்கும் சின்னத்திரை ஜோடி. அதுவும் இதுக்காவா ?

0
1341
Rajkamal
- Advertisement -

சூட்டிங்க்காக லட்சக்கணக்கில் செலவு செய்து சின்னத்திரை தம்பதிகள் வீடு கட்டி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெள்ளித்திரை- சின்னத்திரை இரண்டிலுமே மிகப்பிரபலமான ஜோடிகளாக திகழ்பவர்கள் ராஜ்கமல்- லதா ராவ். இந்த ஜோடிகள் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் பல ஆண்டு காலமாக சீரியல்களில் நடித்து வருகிறார்கள். இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

இவர்கள் இருவரும் காதலித்த நாள் தொடங்கி திருமணம் ஆகி குழந்தைகள் பெற்றும் இன்னும் அதே அன்புடனும் பாசத்துடனும் இருக்கிறார்கள். தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. மேலும், ராஜ்கமல் சின்னத்திரையில் நடித்து வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்தார். பின் பெரிய அளவில் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் சின்னத்திரைக்கு வந்து விட்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : கடந்த 4 ஆண்டில் நான்கே இன்ஸ்டா பதிவு – மகளின் பிறந்தநாளுக்கு முட்டும் போஸ்ட் போடும் அசின். அவரது மகள் எப்படி இருக்கார் பாருங்க இப்போ.

ராஜ்கமல் நடிக்கும் சீரியல்:

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் அபியும் நானும் சீரியலில் டிரைவர் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. தற்போது இந்த சீரியல் பல திருப்பங்களுடன் சென்றிருக்கின்றது. அதேபோல் லதா ராவ் வெள்ளித்திரை- சின்னத்திரை இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாவம் கணேசன் சீரியலில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

லதா ராவ் திரைப்பயணம்:

இதனை அடுத்து இவர் படங்களில் அண்ணி, அக்கா போன்ற கதாபாத்திரங்களிலும், வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இருவருமே பிசியாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி இருக்கிறார்கள். இதில் தன் மகள்களோடு சேர்ந்து வீடியோக்கள் எல்லாம் போட்டு வருகிறார்கள். இதில் இவர்கள் போடும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ராஜ்கமல்- லதா ராவ் யூடியூப் சேனல் :

இதனால் இவர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து வீடு கட்டி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர்கள் நடத்தி வரும் யூடியூப் சேனலில் அவர்கள் புதிதாக கட்டிய வீட்டை ரசிகர்களுக்கு காட்டி இருக்கிறார்கள். லட்சக்கணக்கில் செலவு செய்து இந்த வீட்டை பிரம்மாண்டத்தின் உச்சமாக ராஜ்கமல்- லதா ராவ் கட்டி முடித்து இருக்கின்றனர்.

பிரமாண்டமாக கட்டிய ஷூட்டிங் வீடு:

இந்த வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், தம்பி ராமையா என பல சினிமா பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். இந்த வீட்டை சினிமா சூட்டிங்காக மட்டுமே பார்த்து பார்த்து கட்டி இருப்பதாக கட்டியிருக்கின்றனர். மேலும், இரண்டு பெரிய ஹால், 4 பெட்ரூம், கார் பார்க்கிங், கிச்சன், பூஜை அறை என எல்லாவற்றிலும் பிரம்மாண்டமாக செய்து இருக்கிறார்கள். தற்போது இவர்களுடைய ஷூட்டிங் வீடு தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement