சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் டி.ராஜேந்தர் – நேரில் சென்று பார்த்த கமல் ( TR எப்படி இருக்கார் பாருங்க )

0
455
tr
- Advertisement -

சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கும் டி ராஜேந்தரை நடிகர் கமல் நேரில் சென்று பார்த்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் டி ராஜேந்தர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட இயக்குனர், இசை கலைஞர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். அதோடு டி ராஜேந்தர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு பல திறமைகளைக் கொண்டவர்.

-விளம்பரம்-

சமீப காலமாக படம் இயக்குவதை நிறுத்திய டி ராஜேந்திரன் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த கவண் படத்தில் நடித்திருந்தார். கவண் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் பாடல் பாடியும் இருந்தார் டி ராஜேந்தர். தற்போது இவர் ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் டி ராஜேந்திரன் அவர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பராக என்றென்றும் கலக்கிக் கொண்டிருப்பவர் சிம்பு. இவரை திரை உலகிற்கு கொடுத்தவரே டி ராஜேந்தர் தான்.

- Advertisement -

சிம்பு பற்றிய தகவல்:

குழந்தை நட்சத்திரமாக சிம்பு அவர்கள் பல படங்களில் நடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இடையில் இவருடைய படங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் சமீப காலமாக இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்புவின் நடிப்பில் வெளிவந்து இருந்த மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது காடு உட்பட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

டி ராஜேந்தரின் உடல் நிலை:

இந்த நிலையில் டி ராஜேந்தர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. சமீபத்தில் டி ராஜேந்தர் அவர்கள் சென்னை போரூரில் உள்ள தனியார் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.

-விளம்பரம்-

சிம்பு வெளியிட்ட அறிக்கை:

எனது தந்தை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவரது வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அவர் உடல் நலம் கருதியும் உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறோம். அவர் முழு சுயநினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். பிரார்த்தனைக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி என்று கூறியிருந்தார்.

சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் TR:

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் டி ராஜேந்தர் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று நம்பிக்கை வார்த்தைகளை பதிவிட்டு வந்தார்கள். இந்த நிலையில் டி ராஜேந்தர் இன்று அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதாவது இன்று டி ராஜேந்தர் அவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல உள்ள நிலையில் 5.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை ஏற்பாடுகளை மேற்கொள்ள கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே நடிகர் சிம்பு அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement