கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ உதவி கேட்ட டாப்ஸி, காரை விற்று பணம் கொடுக்க சொன்ன ரசிகருக்கு பதிலடி.

By Rajkumar · 29/4/2021

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

https://twitter.com/taapsee/status/1387402836418338827

அதிலும் கொரோனா அதிகமாக பாதித்து வரும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் நோயாளிகள் அவதிப்படுவதும், உயிரிழப்புகள் அதிகமாகாவதும் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக் குறை குறித்து பேசிய நீதிபதிகள்,

இதையும் பாருங்க : ஷிவானிக்கு ஜோடி சோம், அனிதாக்கு ஜோடி, யார் அந்த நடுவர்கள். இதோ பிக் பாஸ் ஜோடிகளின் விவரம்.

மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று.இதை மத்திய அரசாங்கம் சரியாக செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு பிச்சை எடுத்தோ, திருடியோ, கடன் வாங்கியோ, அல்லது பணம் கொடுத்தோ, எதையோ செய்து, நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் சப்ளை செய்யுங்கள்," என்று கூறினர்.

https://twitter.com/taapsee/status/1387403837078601730

அதிலும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கிறது. அம்மாநிலத்தில் ஏராளமானோர் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இடம் கிடைக்காதது உள்ளிட்டவைகளால் உயிரிழந்து வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் கொரோனாவால் மருத்துவமனையில் இடம் கிடைக்காமலும், ஆக்சிஜன் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் நோயாளிகளுக்கு உதவும் விதமாக டாப்ஸி தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் டாப்ஸியின் இந்த பதிவிற்கு ட்விட்டர் வாசி ஒருவர், இப்படி ட்வீட் போடுவதற்கு பதிலாக உங்க காரை தானாம் செய்யுங்கள் என்று கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த டாப்ஸி, 'தயவு செய்து கொஞ்சம் வாயை மூடுகிறீர்களா. இது மிகவும் எரிச்சலூட்டுகிறது. இதுதான் நீங்கள் சொல்ல விரும்புவது என்றால் நாடு மீண்டும் சாதாரணமாக சுவாசித்த பின்னர் இதுபோன்ற அசிங்கமான செயல்களை நீங்கள் செய்யுங்கள். என்னுடைய பக்கத்தில் வந்து எப்படி முட்டாள் தனம் செய்ய வேண்டாம். என்னுடைய வேலையை செய்ய விடுங்கள்' என்று சாட்டியுள்ளார் டாப்ஸி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full