ஷிவானிக்கு ஜோடி சோம், அனிதாக்கு ஜோடி, யார் அந்த நடுவர்கள். இதோ பிக் பாஸ் ஜோடிகளின் விவரம்.

0
1992
BB

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி, ஜோடி போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல சீசன்களை கடந்து ஹிட் அடித்தது.

என்னதான் பல ரியாலிட்டி ஷோ வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடித்துக்கொள்ளும் வகையில் விஜய் டிவியிடம் வேறு எந்த ரியாலிட்டி ஷோவும் இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான் பிக் பாஸ் முடிந்தால் கூட பிக் பாஸ் போட்டியார்களை வைத்து எதாவது ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து கொண்டு வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் பிக் பாஸ் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து ஒரு புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றை விஜய் டிவி துவங்க இருக்கிறது.

இதையும் பாருங்க : ஓவியா பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி செம பல்ப் வாங்கியுள்ள ஜூலி. (இவங்களுக்கு இதே வேலையா போச்சி)

- Advertisement -

சரி, என்ன நிகழ்ச்சி ? நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் ? என்ற கேள்வி எழுகிறதா ? வேறு ஒன்றும் புதுமையான நிகழ்ச்சி இல்லை. விஜய் டிவியில் பல ஆண்டுகள் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியை தான் தற்போது பிக் பாஸ் பிரபலங்களை வைத்து துவங்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ‘பிக்பாஸ் ஜோடி’ என்று பெயர் வைத்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 1 முதல் 4 வரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பிரபல நட்சத்திரங்கள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் இடம்பெறுகிறார்கள்.பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்போர் விவரம்:

-விளம்பரம்-

1.ஷிவானி – சோம் சேகர்
2.கேபிரியல்லா – ஆஜீத்
3.அனிதா – ஷாரிக்
4.நிஷா – தாடி பாலாஜி
5.வனிதா – சுரேஷ் சக்ரவர்த்தி
6.சம்யுக்தா – ஜித்தன் ரமேஷ்
7.ஜூலி – சென்றாயன்
8.பாத்திமா பாபு – மோகன் வைத்யா ஆகியோர் நடனமாடுகிறார்கள்.

Advertisement