லிப் லாக் காட்சிகளுக்கு நோ சொல்லி வந்த தமன்னா.! ஆனால், இந்த நடிகர் என்றால் மட்டும் ஓகேவாம்.!

0
1269
Tamanna

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை தம்மனா. தமிழில் விஜய், அஜித், விஜய், சூர்யா என அணைத்து பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தார்.அதுமட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று அம்மணி ஒரு ரௌண்டு வந்துவிட்டார்.

ஆனால், சமீபகாலமாக அம்மணிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் வந்தபாடில்லை. அதனால் ஒரு சில படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் பாடலுக்கு மட்டும் பாடலுக்கு நிலைக்கு வந்துவிட்டார். பாகுபலி போன்ற பிரம்மாண்ட படத்தில் நடித்தாலும் தற்போது அம்மணிக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லை.

- Advertisement -

இதனால் கன்னடத்தில் யாஷ் நடிப்பில் வெளியான ‘kgf’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் போடும் அளவிற்கு அம்மணிக்கு நிலை வந்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘கண்ணே கலைமானே’ படம் கொஞ்சம் மார்க்கெட்மீட்டெடுத்து கொடுத்துள்ளது.

படங்களில் கவர்ச்சியாக நடித்து வரும் தமன்னா லிப் லாப் காட்சிகளுக்கு மட்டும் கறாராக நோ சொல்லி வந்தார். ஆனால், இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் என்றால் மட்டும் லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க முழு சம்மதம் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஒரு வேலை ஹிந்தி பட வாய்ப்பிற்கு கொக்கி போடுகிறாறோ.

-விளம்பரம்-
Advertisement