விஜய் அஜித்தில் யாரு ஹாட் யாரு மாஸ்.! இருவருடன் நடித்த தமன்னா சாய்ஸ் இது தான்.!

By Rajkumar · 22/2/2019

தமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை தம்மன்னா, விஜய் அஜித் குறித்து பேசியுள்ள.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் நடிகை தம்மன்னா. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருடன் நடித்த நடிகைகளில் இவரும் ஒருவர்.

பாலிவுட் சென்ற பின் அம்மணிக்கு தமிழில் சற்று மார்க்கெட் குறைந்து விட்டது. தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் 'கண்னே கலைமானே' என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் தமன்னா.

அப்போது தமன்னாவிடம் அஜித்-விஜய்யில் யார் ஸ்மார்ட், ஹாட் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் அஜித் ஹாட் என்றும் விஜய் ஸ்மார்ட் என்றும் கூறியுள்ளார். இவர் நடித்துள்ள கண்ணே கலைமானே படம் என்று வெளியாகையுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full