வைரலான திருமண செய்தி, தன்னுடைய பிஸ்னஸ் மேன் கணவர் என்று குறிப்பிட்டு தமன்னா பதிவிட்ட புகைப்படம்.

0
437
tamanna
- Advertisement -

நடிகை தமன்னாவிற்கு கூடிய விரைவில் திருமணம் ஆக இருப்பதாக தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் தற்போது தமன்னா பதிவிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தம்மனா. தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி’ படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா. ஆனால், அதற்கு முன்பாகவே இவர் 2005 ஆம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

-விளம்பரம்-

அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது.

- Advertisement -

தமன்னா திரைப்பயணம்:

கடைசியாக இவர் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த ஆக்சன் என்ற படத்தில் தான் தமிழில் நடித்திருந்தார். சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஹிந்தியில் தமன்னா நடித்திருந்த படம் பப்ளி பவுன்சர். இந்த படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார்.

தமன்னா நடிக்கும் படங்கள்:

இதனை எடுத்து தமன்னா அவர்கள் ஹிந்தியில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு இவர் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இப்படி இவர் சினிமா உலகில் நுழைந்து 17 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

-விளம்பரம்-

தமன்னா திருமணம்:

அப்படி இருந்தும் தமன்னா தன்னுடைய உடலை ஒல்லியாகவும், பிட்டாகவும் வைத்து இருக்கிறார். சமீப காலமாக இவர் அழகு குறித்தும், பிட்னஸ் குறித்தும் டிப்ஸ் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தமன்னாவிற்கு திருமணம் நடைபெற இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதாவது, தமன்னா அவர்கள் மும்பையில் உள்ள தொழிலதிபர் ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.கூடிய விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் பரவியது.

தமன்னா பதிவிட்ட புகைப்படம் :

இதை தமன்னாவே விரைவில் சமூக வலைத்தளங்களில் அறிவிப்பார் என்றுகூறப்பட்டது. ஆனால், தமன்னா திருமணம் செய்து கொள்ளும் நபர் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகை தமன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஆண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘என்னுடைய பிஸ்னஸ் மேன் கணவரை அறிமுகம் செய்து வைக்கிறேன்’ என்று கேலியாக பதிவிட்டு தன்னுடைய திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement