தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணன் நடித்த கேடி படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சியமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் ஹிந்தி படங்களில் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். இடைப்பட்ட காலங்களில் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்தது.

பின் பிரபாஸின் பாகுபலி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகை தமன்னா பிசியாக படங்களில் நடித்துப் வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘அரண்மனை 4’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது. அரண்மனை 4 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை தமன்னா ஹிந்தியில் வேதா, ஸ்ட்ரீ 2 மற்றும் தெலுங்கில் ஓடெலா 2 போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
தமன்னா குறித்த தகவல்:
அதோடு சமீப காலமாகவே தமன்னா அவர்கள் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். அந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கிடையில் தமன்னா அவர்கள் நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியானது. கடந்த 2023 ஆம் ஆண்டு தமன்னா- விஜய் வர்மா இணைந்து நடித்த வெப் தொடர் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்-2’. இதன் மூலம் தான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் இருவரும் சேர்ந்து காதலிப்பதாக தகவல் வெளியாகிருந்தது. இவர்கள் இருவருமே சில வருடங்களாக டேட்டிங் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

தமன்னா பேட்டி:
பின் இவர்கள் இருவருமே தங்கள் காதலை வெளிப்படையாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். அதற்குப்பின் சில மாதங்களாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் பிரேக்கப் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது தமன்னா சிங்கிளாக தான் இருக்கிறார். அதோடு தன்னுடைய படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமன்னா 'Do You Wanna Partner?' என்ற புதிய வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸ் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.

திருமணம் பற்றி சொன்னது:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமன்னா, ஒரு சிறந்த வாழ்க்கை துணையாக மாறுவதற்கு நான் இப்போது முயற்சி செய்து கொண்டு வருகிறேன். நான் ஒருவருடைய வாழ்க்கையில் செல்லும்போது அவர் முந்தைய வாழ்க்கையில் ஏதோ நல்ல காரியங்களை செய்து இருக்கிறார் என்று உணர வேண்டும். காதலுக்கும் உறவுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் குழப்பி கொள்கிறார்கள். அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவாகவோ அல்லது நண்பர்கள் கிடையிலானதாகவோ கூட இருக்கலாம். காதல் என்பது நிபந்தனை அற்றதாக மட்டுமே இருக்க முடியும். அது ஒருதலை பட்சமாக இருந்தாலும் அது உங்களுடைய காதல் என்று கூறி இருக்கிறார்.






