முதன் முறையாக விராட் கோலியுடனே காதல் குறித்து பேசிய தமன்னா.!

0
1150
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை தம்மனா. தமிழில் விஜய், அஜித், விஜய், சூர்யா என அணைத்து பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று அம்மணி ஒரு ரௌண்டு வந்துவிட்டார்.

-விளம்பரம்-

கடந்த 2012 ஆம் ஆண்டு தமன்னாவும் வீராட்கோலியும் விளம்பர திரைப்படமொன்றில் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டடு அடிக்கடி சந்தித்து நட்போடு பழகி வந்தனர் என்றும் அது காதலாக மலர்ந்து திருமணம் வரை சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது.

- Advertisement -

இந்த செய்தியை தமன்னா மற்றும் வீராட் கோஹ்லி இருவருமே மறுக்கவில்லை. ஆனால் உறுதிப்படுத்தவும் இல்லை. திருமணம் முடிந்துவிட்டதா? அல்லது வெறும் வதந்திதானா என்று அப்போது பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால், பின்னர் விராட், இந்தி நடிகை அனுஷ்காவை திருமணம் செய்து கொண்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இருப்பினும் தமன்னாவும், விராட்டும் காதலித்தார்களா இல்லையா என்பதற்கான விடை இன்னமும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தமன்னா இதுகுறித்து தெளிவு படுத்தியுள்ளார். விராட்டுடன் நான் விளம்பரம் படம் ஒன்றில்நடித்தேன் அப்போது மட்டும் தான் நான் அவரிடம் பேசியுள்ளேன். அதன் பின்னர் நான் அவரை சந்தித்தும் இல்லை பேசியதும் இல்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement