‘இப்படிப்பட்ட ஒருவரை தான் நான் எதிர்பார்த்தேன்’ – நடிகருடனான காதலை உறுதி செய்த தமன்னா.

0
2132
- Advertisement -

தமன்னா காதலிக்கும் நபர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தம்மனா. தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி’ படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா. ஆனால், அதற்கு முன்பாகவே இவர் 2005 ஆம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

-விளம்பரம்-

அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது.

- Advertisement -

தமன்னா திரைப்பயணம்:

சமீபத்தில் ஹிந்தியில் தமன்னா நடித்திருந்த படம் பப்ளி பவுன்சர். இந்த படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படம் நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

தமன்னா நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாக தமன்னாவின் திருமணம் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

தமன்னா காதலிக்கும் நபர்:

இந்நிலையில் தமன்னா காதலிக்கும் நபர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, சமீப காலமாகவே தமன்னா நடிகர் விஜய் வர்மாவுடன் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளிவந்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து தமன்னா பேட்டியில் கூறியது , நான் விஜய் வர்மாவை காதலிப்பது உண்மைதான். லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தில் நடித்த போதுதான் எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஒருவர் கோஸ்டார் ஆக இருப்பதால் மட்டும் காதல் வந்து விடாது. நான் பல கோ-ஸ்டார்களை பார்த்திருக்கிறேன்.

காதலிக்கும் நபர் குறித்து சொன்னதி:

ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு வருவது பர்சனல் விஷயம். .இப்படிப்பட்ட ஒருவரை தான் நான் எதிர்பார்த்தேன் அவருடன் எனக்கு இயற்கையாகவே ஈர்ப்பு வந்தது. அவரின் மீது ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டும் என்றால் ஒருவருக்காக வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற நிலைதான் இந்தியாவில் இருக்கிறது. ஆனால், நான் எனக்காக உருவாக்கி வைத்திருந்த உலகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அவர் புரிந்து கொண்டார். அவர் என் மீது தற்போது அதிக அக்கறை வைத்திருக்கிறார். அவரால் தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement