நடிகை தமன்னாவின் போட்டோஷூட்டால் கிளம்பிய சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென் இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணன் நடித்த 'கேடி'படம் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சியமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் ஹிந்தி படங்களில் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான 'பாகுபலி' படத்தின் மூலம்தான் நடிகை தமன்னாவிற்கு சினிமாவில் மார்க்கெட் எங்கேயோ சென்றது.
தமன்னா போட்டோ ஷூட்:
இந்நிலையில் நடிகை தமன்னா, பிரபல ஆடை வடிவமைப்பாளர் தோரானியின் மாடலாக போட்டோ ஷூட் ஒன்றை நடித்தி இருக்கிறார். 'லீலா தி இல்யூஷன் ஆஃப் லவ்' என்ற பெயரில் கிருஷ்ணனின் காதலுக்காக காத்திருக்கும் ராதா என்ற கருப்பொருளை கொண்டு இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. அதில், கண்களை கவரும் ஆடைகளில் ராதாவாக தோன்றிய தமன்னா, அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கிளம்பிய சர்ச்சை:
அதோடு, ராதாவை உருவகப்படுத்தும் போது தாம் ஒரு உன்னதமான தொடர்பை உணர்ந்ததாகவும், எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு தெய்வீக சக்தி இருப்பதாக தோன்றியதாகவும் அதில் தமன்னா குறிப்பிட்டு இருந்தார். அந்தப் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் தமன்னாவை திட்டி பதிவிட்டிருந்தார்கள். அதாவது, ராதாவாக தமன்னா அணிந்திருந்த ஆடைகள் மிக ஆபாசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

புகைப்படங்களை நீக்கிய தமன்னா:
அதனைத் தொடர்ந்து தற்போது, நடிகை தமன்னா தனது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து, சர்ச்சையை கிளப்பிய அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கி உள்ளார். தற்போது இந்த செய்தி தான் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகியுள்ளது. சமீப காலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஹிந்தியில் தமன்னா நடிப்பில் வந்த படம் 'பவுன்சர்'. அந்தப் படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். அதோட இவர் சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமன்னா நடிக்கும் படங்கள்:
தற்போது நடிகை தமன்னா பிசியாக படங்களில் நடித்துப் வருகிறார். அவர் நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளிவந்த படம் 'அரண்மனை 4' . இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது. அரண்மனை 4 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை தமன்னா ஹிந்தியில் வேதா, ஸ்ட்ரீ 2 மற்றும் தெலுங்கில் ஓடெலா 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.






