வெப் சீரிஸ்ஸில் காதலருடன் படு நெருக்கமான காட்சியில் நடித்துள்ள தமன்னா – வைரலாகும் வீடியோ

0
1427
- Advertisement -

வெப் தொடரில் ஆபாசமாக நடித்தது குறித்து எழுந்த சர்ச்சைக்கு தமன்னா கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தமன்னா. தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி’ படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா. ஆனால், அதற்கு முன்பாகவே இவர் 2005 ஆம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

-விளம்பரம்-

அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது.

- Advertisement -

தமன்னா திரைப்பயணம்:

கடைசியாக இவர் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த ஆக்சன் என்ற படத்தில் தான் தமிழில் நடித்திருந்தார். சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஹிந்தியில் தமன்னா நடித்திருந்த படம் பப்ளி பவுன்சர். இந்த படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இதனை அடுத்து தமன்னா அவர்கள் ஹிந்தியில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தமன்னா நடிக்கும் படங்கள்:

அதோடு இவர் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். தற்போது தமன்னா அவர்கள் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இவர் ஒரு வெப் தொடர் ஒன்றில் நடித்திருக்கிறார். அதற்கு லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

கவர்ச்சி காட்டும் தமன்னா:

சமீபத்தில் தான் இந்த வெப் தொடரின் ட்ரைலர், டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் தமன்னா உடைய காட்சிகள் எல்லாம் கவர்ச்சியாக இருக்கிறது. இதன் பின் ஜீ கர்தா என்ற தொடரிலும் தமன்னா நடித்திருக்கிறார். அதில் அவர் நடிகர் சுஹைல் நய்யாருடன் நெருக்கமாக நடித்திருக்கிறார். இப்படி தமன்னா கவர்ச்சியாக நடித்து வருவதற்கு காரணம் பட வாய்ப்பு இல்லாததா? ஏன் இப்படி இவர் கவர்ச்சி காட்டி வருகிறார்? என்றெல்லாம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமன்னா கொடுத்த விளக்கம்:

இந்த நிலையில் இது குறித்து தமன்னா கூறியிருப்பது, அந்த தொடரில் பள்ளிப் பருவத்து காதலை கூறுவதால் சில இடங்களில் நெருக்கமான காட்சிகள் தேவைப்பட்டது. படத்திற்கு தேவை என்றால் இந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க முடியாது. அதனால் தான் நான் நடித்தேன் என்று தமன்னா கூறியிருக்கிறார்.

Advertisement