தென்இந்திய சினிமா திரை உலகில் 80,90களில் நடித்த முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் முரளி. இவரை அதிகம் இதயம் முரளி என்று தான் அழைப்பார்கள். முரளி அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் 70க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதோடு தமிழ் திரை உலகிற்கு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பூவிலங்கு’ என்னும் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். அதற்கு பின்னர் 1990ல் புதுவசந்தம், 1990-இல் இதயம் என்ற படத்தின் மூலம் தான் இவர் மக்களிடையே அதிகமாக பிரபலமானார். அது மட்டும் இல்லைங்க ‘கடல் பூக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு தமிழக அரசு நடிகர் முரளிக்கு சிறந்த நடிகர் என்ற பட்டத்தை வழங்கியது.

மேலும், முரளியின் தந்தை சித்தலிங்கையா. இவர் பல படங்களை தயாரித்து உள்ளார் . முரளி அவர்கள் ஷோபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும். காவியா என்ற மகளும் உள்ளார்கள். அதர்வா யார்? என்று உங்களுக்கே தெரியும். தற்போது தமிழ் திரையுலகில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் ஆவார். பாண காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானவர். இந்த படத்தில் முரளி அவர்களும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், இதுவே அவருடைய கடைசி படம் என்றுகூட சொல்லலாம்.இது மட்டும் இல்லைங்க இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபு தேவா, மம்முட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும், மீனா, சிம்ரன், தேவயானி, ரம்பா உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்தவர்.

இதையும் பாருங்க : விபத்தால் மஞ்சுமாவிற்கு நேர்ந்த கதி.. பார்த்தா நீங்களே பரிதாபபடுவீங்க..

Advertisement

அதோடு இவர் ஜெயலலிதா அம்மாவின் மீது அதிக பற்று கொண்டவர். அதன் காரணமாக அதிமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். அது மட்டும் இல்லைங்க அதிமுக கட்சியின் தேர்தலின் சுற்றுப்பயணம், பிரச்சாரமும் ஆகியவற்றை மேற்கொண்டவர். மேலும்,நடிகர் முரளி அதிகமாக படங்களில் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் தான் நடித்து உள்ளார். அதோடு தன் நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இன்று வரை நீங்காமல் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் முரளி பற்றி பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. அது என்னனா! நடிகர் முரளிக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் மேல் அதிக பற்று கொண்டவர். அதனால் 2006ஆம் ஆண்டு தன்னை அதிமுக கட்சியில் இணைந்தார்.

மேலும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் தேதி அறிவித்தவுடன் ஜெயலலிதா அம்மாவை எப்படியாவது முதலமைச்சர் பதவியில் உட்கார வைக்க வேண்டும் என்றும், அதற்காக நான் உழைக்க தயாராக உள்ளேன் என்றும் கூறினார். மேலும், கண்டிப்பாக ஜெயலலிதா அம்மாவை முதல்வராக ஆகியே தீருவேன். இதுதான் என ஆசை என்றும் கூறியிருந்தார். ஆனால், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி யாரும் நினைத்துப் பார்க்காத அளவில் சோகம் நடந்தது. அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அவருக்கு 46 வயது தான். ஆனால், அவர் கனவு கண்டதைப் போலவே ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு முதலமைச்சரானார். மேலும்,முரளி அவர்கள் ஆத்மாவும் சாந்தி அடைந்து இருக்கும் என்றும் கூறினார்கள்.

Advertisement
Advertisement