தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி ஒரு போறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்களின் எதிர்பாராத இழப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் கூட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் பாண்டு இன்று (மே 6) காலமாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. தமிழ் சினிமாவில் இதுவரை விஷால், சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், கருணாஸ், அதர்வா என்று பலவேறு பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினர்.

இதையும் பாருங்க : அபூர்வ சகோதரர்கள் குள்ள நடிகர் காலமானார் – 90ஸ் கிட்ஸ் இவரை மறக்க முடியுமா ?

Advertisement

இப்படி ஒரு நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு நடிகர் பாண்டு காலமாகி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் இன்று (மே 6) அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். நடிகர் பாண்டு மற்றும் குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். ஆம், நடிகர் பாண்டு நடிகர் என்பதை விட ஒரு சிறந்த ஓவிய கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement