அபூர்வ சகோதரர்கள் குள்ள நடிகர் காலமானார் – 90ஸ் கிட்ஸ் இவரை மறக்க முடியுமா ?

0
939
mela
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி ஒரு போறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்களின் எதிர்பாராத இழப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் கூட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அப்பு கமலின் நண்பராக நடித்த நடிகர் காலமாகியுள்ளார்.

-விளம்பரம்-

உலக நாயகன் கமலஹாசன், தமிழ் திரை உலகை தாண்டி இந்தி சினிமாவிலும் தனது கால் தடத்தை பதித்தவர். 1989 ஆம் ஆண்டு இவர் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் தமிழ், தெலுகு, இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தில் அப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்த கமலின் குள்ளமான உருவத்தின் ரகசியம் இன்று வரை ஒரு மிக பெரிய ஆச்சர்யமாக தான் உள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் அப்பு கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர் நடிகர் மேலா ரகு. கேரலாவை பூர்விகமாக கொண்ட இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து வந்தாலும் 30 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தமிழை விட மலையாளத்தில் தான் இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இறுதியாக மோகன் லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் 2 படத்தில் நடித்து இருந்தார்.

60வயதான இவை, கடந்த ஏப்ரல் 18ம் தேதி தனது வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதன் பிறகு உடனே கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (மே 5) பரிதாபமாக உயிரிழந்தார்.  இவரது மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement