சமீபத்தில் வெளியாகி இருந்த தி பேமிலி மேன் 2 ட்ரைலர் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தி பேமிலி மேன் வெப் தொடரின் முதல் சீசன் கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியாகி இருந்தது. ராஜ், டிகே ஆகியோர் இயக்கி இருந்த இந்த வெப் தொடரில் இதில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் போன்ற ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகர்கள் நடித்து இருந்தனர். இன்வெஸ்டிகேடிவ் க்ரைம் த்ரில்லராக இந்த தொடர் உருவாகி இருந்தது. மேலும், ரசிகர்கள் மத்தியில் இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த தொடரின் இரண்டாம் சீசன் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே முதல் சீசனில் நடித்த நடிகர்களுடன் இந்த இரண்டாம் தொடரில் சமந்தாவும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடரில் நடிப்பது குறித்து சமந்தா கூறியதாவது : –

இதையும் பாருங்க : சாண்டி மகள் லாலாவா இது – எப்படி நெடு நெடுனு வளர்ந்துட்டார் பாருங்க. லேட்டஸ்ட் புகைப்படம்.

Advertisement

விதிகளை உடைக்கும் வாய்ப்பை ஓ.டி.டி. தளங்கள் வழங்குகின்றன. பேமிலிமேன் 2 தொடரில் நான் பல விதிகளை உடைத்து இருக்கிறேன். என்னை குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்கள் ஆச்சரியப்படுவார்கள். திரைப்படங்களில் பொதுவான கதாபாத்திரங்களில்தான் நடிக்க முடியும் ஓ.டி.டி.யில்தான் பரிசோதனை செய்து பார்க்க முடிகிறது என்று கூறி இருந்தார்.

மேலும், இந்த தொடரில் நடிகை சமந்தா பயங்கரவாத குழுவை சேர்ந்த மனித வெடிகுண்டாக நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. சமீபத்தில் இந்த தொடரின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இதில் சமந்தா இலங்கையில் இருந்து வந்தவரை போல காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து வந்த தீவிரவாதிதான் சமந்தா என்றும், ,மனோஜ் பாஜ்பாயி அவரை பிடிக்கும் என்ஐஏ அதிகாரியாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

சமந்தா இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணாக காட்டப்பட்டுள்ளது. இந்த ட்ரைலரில் நான் எல்லோரையும் கொல்ல வேண்டும் என்று சமந்தா தமிழில் பேசுவதாகவும் காட்டி இருக்கிறார்கள். மேலும்,சமந்தாவை இலங்கையில் உள்ள போராளி குழுவை சேந்தவர் என்று கூறி, அவருக்கும் ஐஎஸ்எஸ் அமைப்புக்கும் கூட்டணி இருப்பதாகவும் காட்டி உள்ளனர். இப்படி ஒரு நிலையில் தமிழகர்களை தீவிரவாதி போல இந்த ட்ரைலர் சித்தரித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

இதனால் ட்விட்டரில், #FamilyMan2_against_Tamils என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. தமிழர்களை தீவிரவாதியாக சித்தரித்துள்ள இந்த தொடரில் சமந்தா நடிக்கக் கூடாது என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக ஈழத்தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வெப் தொடரை தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement