தமிழ் நடிகர் சங்கம் அறிவித்த நடிகர்களின் சம்பளம் விவரம்..!ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை..!

0
513
Rajinivijayajith

இந்திய சினிமாவின் ஒரு பெரிய சினிமா அமைப்பு தமிழ் சினிமா அமைப்பு. கிட்டத்தட்ட 75 ஆண்டுகாலம் கடந்து ஒரு கட்டமைப்புடன் கம்பீரமாக நடை போட்டுக்கொண்டிருக்கிறது.தற்போது பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் எளிதாக 100 கோடி வர்த்தகம் செய்கிறது.

அதிலும் குறிப்பாக ரஜனி,கமல்,விஜய்,அஜித் ஆகியோரின் படங்கள் 200 கோடி என்ற இலக்கை நோக்கியே பயணிக்கிறது. பெரும்பாலும் பெரிய நடிகர்களுக்கு பட்ஜெட்டில் பெரும் பங்கு சம்பளமாகவே சென்று விடுகிறது என்ற பேச்சும் நிலவுகிறது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ் நடிகர்களின் ஒரு படத்திற்கான சம்பளம் பற்றிய வெளிப்படையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என கூறியிருந்தார்.

அந்த வகையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் தமிழ் சினிமாவில் நடிக்கும் சில முன்னணி நடிகர்களின் சம்பள தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முன்னணி ஹீரோக்களின் சம்பளங்கள் இதோ.

1.ரஜினி – ரூ. 60 கோடி

2.கமல் – ரூ. 30 கோடி (2010ல் இருந்து தயாரிப்பு குழுவுடன் இலாப பங்கு வைத்து கொள்கிறார்)

3.விஜய் – ரூ. 40 கோடி

4.அஜித் – ரூ. 30 கோடி

5.சூர்யா – ரூ. 18 முதல் 22 கோடி

6.விக்ரம் – ரூ. 25 கோடி

7.சிவகார்த்திகேயன் – ரூ. 20 கோடி

8.விஜய் சேதுபதி – ரூ. 8 கோடி