தமிழ் கடவுள் முருகன் பார்வதி “ப்ரியா” யார் தெரியுமா ?

0
2110
Priya

விஜய் டீவியில் பார்வதி கேரக்டரில் நடித்து வருபவர் ப்ரியா. இவர் இதற்கு முன்னர் சில சீரியல்களில் நடித்துள்ளார். இவருடைய முழு பெயர் ப்ரியா பிரின்ஸ். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் ஜர்னலிசம் படித்தவர். தமிழ் கடவுள் முருகன் நாடகத்தில் நடிக்கும் முன்னர் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்தார்.

Priya prince

அதன் பின்னர் விஜய் டீவியில் ஒளிபரப்பான இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் பல சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் பெற்றார்.

தமிழ் கடவுள் முருகன் சீரியலுக்கு வைத்த ஆடிசனில் மூன்று முறை பங்கேற்றார். அந்த மூன்று முறையும் முதல் ஆளாக தேர்வானார். இதன் காரணமாக பார்வதி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

priya Actor

priya-news-reader

பார்வதி கேரக்டரில் நடிப்பதற்காக 5 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார் பிரியா. கடந்த இரண்டு மாதமாக இந்த இந்த நாடகத்தில் நடித்து வரும் இவர் அடுத்த தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.