திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நல்லா இருக்கும் - கோரிக்கை வைத்தவருக்கு ஸ்டாலின் அளித்த பதில்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி மு க மாபெரும் வெற்றிபெற்றதன் மூலம் முதல் முறையாக தமிழக முதலமைச்சராக நேற்று காலை 9.10 மணிக்கு பொறுப்பேற்றார் மு க ஸ்டாலின். . தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.
https://twitter.com/R_Induja/status/1390712828860932098
கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி கடந்த (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்றுது. இதில் ஆரம்பம் முதலே பல்வேறு தொகுதிகளில் தி மு க தான் முன்னிலை வகித்து வந்தது. . இதில், திமுக கூட்டணி 159 இடங்களை கைபற்றியது. திமுக 125 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சின்னத்தில் நின்றவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதன் மூலம் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்தது.
இதையும் பாருங்க : திருமணத்திற்க்கு பின்னர் சினிமாவிற்கு டாடா சொன்ன யாரடி நீ மோகினி பட நடிகையா இது ? ஷாக்கான ரசிகர்கள்.
இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியானது.10 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியில் அமருகிறது. நேற்று முதலமைச்சராக பதவியேற்ற ஸ்டாலின் முதல் 5 திட்டங்களில் கையெழுத்திட்டார். கொரோனா பாதிப்புகளை ஈடுகட்ட உதவியாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 4000 தருவதாக உறுதிமொழி கூறியபடி, முதல் தவணையாக, இந்த மாதமே ரூ 2000 வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார் ஸ்டாலின்.
https://twitter.com/R_Induja/status/1390712828860932098
மேலும், ஆவின் பால் விலை, லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா மருத்துவம் பெறுவோருக்கு ஆகின்ற செலவுகளை, முதல் அமைச்சரின் காப்பு ஈட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசே செலுத்தும்மக்கள் தெரிவிக்கின்ற குறைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துச் சீர் செய்திட, 'உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்' என்ற திட்டம் போன்ற திட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
இதில் மிக முக்கியமாக அனைத்து மகளிரும், சாதாரண கட்டணப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற திட்டம் தான். இப்படி ஒரு நிலையில் பத்திரிகையாளர் இந்துஜா என்பவர், . பெண்களுடன், திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும் என்று பதில் அளித்துள்ளார்.