நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தலை விரித்து ஆடிக் கொண்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தவித்து வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என என பல பேர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தி நடிகர் சோனு சூட் அவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக வெளி மாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களை பஸ், விமான போக்குவரத்து மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார்.

கொரோனாவால் சயான்கோலி வாடா பகுதியில் சிக்கிய தமிழர்கள் தங்களின் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வந்தனர். இவர்ளுக்கு உதவி செய்யுமாறு அந்த பகுதியை சேர்ந்த சிலர் நடிகர் சோனு சூட்டின் அலுவலகத்துக்கு சென்று உதவி கேட்டனர். இதை அறிந்த நடிகர் சோனு சூட் அவர்கள் சயான்கோலி வாடாவில் சிக்கிய சுமார் 180 தமிழர்களை விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தார்.

Advertisement

ஆனால், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் பஸ் மூலம் மும்பையில் சிக்கிய தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார். இதில் முதல் பஸ் நேற்று மாலை வடலா டி.டி. பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. மேலும், நடிகர் சோனு சூட் அவர்கள் தேங்காய் உடைத்து பஸ்ஸை அனுப்பி வைத்தார். பத்திரமாக செல்லுமாறு தமிழர்களிடம் சொன்னார்.

அதுமட்டும் இல்லாமல் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி உதவி செய்த சோனு சூட்டிற்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறினர். தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகர் சோனு சூட். இவர் தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

Advertisement
Advertisement