டிஆர்பி ரேட்டிங்கில் 2026 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.

வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதோட டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த இரு சேனல்களின் சீரியல்கள் தான் மாறி மாறி முதலிடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டின் 3வது வாரத்தில் டிஆர்பியில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் பார்க்க போகிறோம்.
சிங்க பெண்ணே:
வாரம் வாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ‘சிங்க பெண்ணே’ சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.80 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ஆனந்தி. தற்போது ஆனந்தி தனக்கே தெரியாமல் கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு துணையாக அன்பு இருக்கிறார். ஆனந்தியை அன்பு திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் இவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

மூன்று முடிச்சு:
இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 9.76 புள்ளிகளை பெற்று இந்த வாரம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் ஸ்சுவாதி கதாநாயகியாகவும், இவருக்கு ஜோடியாக சீரியலில் நிவாஸ் நடிக்கிறார்கள். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் நந்தினி-சூர்யா திருமணத்தால் சூர்யா அம்மா பயங்கர கோபத்தில் இருக்கிறார். இனி அவர் என்ன செய்வார்? என்ற ட்ராக்கில் தான் சென்று கொண்டு இருக்கிறது.

சிறகடிக்க ஆசை:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 9.75 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை தான் சீரியல்.

அய்யனார் துணை :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் அய்யனார் துணையும் ஒன்று. இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் தொடங்கப்பட்டது. இருந்தாலும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஆன கதையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 9.26 புள்ளிகளை பெற்று 4ஆம் இடத்தை பிடித்திருக்கிறது

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியல் தந்தை- மகன்களுக்கு இடையே ஆன உறவை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 8.90 புள்ளிகளை பெற்று 5ஆம் இடத்தை பிடித்திருக்கிறது.






