டிஆர்பி ரேட்டிங்கில் இந்த ஆண்டின் 32-வது வாரத்தில் டாப் 10 இடத்தைப் பெற்று இருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு சேனலும் புதுப்புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.

கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கும் மேலாக சீரியல்கள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.
சீரியல் டிஆர்பி:
அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டின் வகையில் 32 வாரத்தில் முதல் பத்து இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் டாப் 5 இடத்தை சன் டிவி சீரியல்கள் தான் தட்டி தூக்கி இருக்கிறது. முன்னிலையில் இருந்த விஜய் டிவி சீரியல்கள் இந்த வாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

சிங்கப்பெண்ணே சீரியல்:
கடந்த சில வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாம் இடத்தில் இருந்த ‘சிங்கப் பெண்ணே’ சீரியல் இந்த வாரம் முதல் இடத்திற்கு வந்திருக்கிறது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார் ஆனந்தி. இவருடன் சில பேர் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கயல்:
எதிர்பார்க்காத வகையில் சில மாதங்களாகவே முதல் இடத்தில் இருந்த ‘கயல்’ சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியல் 2021 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும், கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்கள். தன் குடும்பத்திற்காக எல்லா சந்தோசத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல்.

மருமகள் சீரியல்:
இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன் தான் சன் டிவியில் ஒளிபரப்பட்டது. ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியலில் கேபி கதாநாயகியாகவும், ‘கண்ணான கண்ணே’ சீரியல் நடிகர் ராகுல் ரவி ஹீரோவாகவும் நடிக்கிறார்கள்.
வானத்தைப்போல:
‘வானத்தைப்போல’ சீரியல் இந்த வாரம் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க முழுக்க அண்ணன்- தங்கை பாசக்கதை. இந்த தொடரில் ஸ்ரீகுமார், மான்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். கூடிய விரைவில் இந்த சீரியல் முடிக்க இருக்கிறார்கள்.

சுந்தரி 2 சீரியல்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் ‘சுந்தரி’. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நன்றாக செல்கிறது. இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சுந்தரி கலெக்டராக இருக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தில் ‘தெய்வமகள் சீரியல்’ நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார். இந்த தொடர் ஐந்தாம் இடத்தை பிடித்து இருக்கிறது.

மல்லி:
சன் டிவியில் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் ‘மல்லி’. கடந்த சில வாரங்களாகவே பின்னுக்கு தள்ளப்பட்ட இந்த சீரியல் டிஆர்பியில் ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறது.

சிறகடிக்க ஆசை:
கடந்த சில வாரமாகவே டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ இந்த வாரம் ஏழாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை.






