-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 டாப் இடத்தை சீரியல்கள் – டாப் 6வில் ஆதிக்கம் செலுத்தும் சேனல்.

0
463

ஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக சீரியல்கள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.

-விளம்பரம்-

வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் சேனல்களாக திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டின் 8வது வாரத்தில் டாப் 10 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

சிங்க பெண்ணே சீரியல்:

சிங்க பெண்ணே சீரியல் 11. 64 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு செல்கிறார் ஆனந்தி. இவருடன் சில பேர் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சீரியலில் ஆனந்தி, அன்புவை காதலிப்பாரா? அவரை திருமணம் செய்து கொள்வாரா? இல்லை மகேஷை திருமணம் செய்து கொள்வாரா? போன்ற பரபரப்பான கட்டங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

எதிர்நீச்சல்:

-விளம்பரம்-

பல வாரங்களுக்கு பின் இந்த சீரியல் 10.64 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இயக்குனர் திருச்செல்வம் தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். பெண்கள் உரிமைக்காக போராடும் இந்த தொடர் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் மத்தியில் அதிக அளவு ஆதரவு பெற்று வருகிறது. தற்போது சீரியலில் தர்ஷினியை மர்ம நபர்கள் கடத்தி வைத்திருக்கிறார்கள். தர்ஷினியை காப்பாற்ற மொத்த குடும்பமும் போராடிக் கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

கயல்:

முதல் இடத்தில் இருந்த கயல் சீரியல் எதிர்பார்க்காத வகையில் சில வாரங்களாகவே மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடர் 10.50 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும், கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்கள். தன் குடும்பத்திற்காக எல்லா சந்தோசம் எல்லாத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல்.

வானத்தைப்போல:

வானத்தைப்போல சீரியல் 9.49 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க முழுக்க அண்ணன்- தங்கை பாச கதை. இந்த தொடரில் ஸ்ரீகுமார், மான்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். பொன்னி-துளசி இடையே ஏற்படும் சண்டை வைத்து தான் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

இனியா:

யாரும் எதிர்பார்க்காத வகையில் நான்காம் இடத்தில் இருந்த இனியா சீரியல் 8.90 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த தொடரில் ஆலியா மானசா, ரிஷி உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

சுந்தரி 2 சீரியல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் சுந்தரி. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நன்றாக செல்கிறது. இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சுந்தரி கலெக்டராக இருக்கிறார். மேலும், இந்த இரண்டாம் பாகத்தில் தெய்வமகள் சீரியல் நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார். இந்த தொடர் 8.23 புள்ளிகளை பெற்று ஆறாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இப்படி எப்போதும் முதல் ஆறு இடங்களை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்து இருக்கிறது.

சிறடிக்க ஆசை:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் 7.83 புள்ளிகளை பெற்று ஏழாம் இடத்தை பிடித்து இருக்கிறது. ஆனால், விஜய் டிவியில் இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கிறது. சீரியலில் மீனா தம்பி சத்யாவுக்கும்-முத்துவுக்கு இடையே பிரச்சனை சென்று கொண்டு இருக்கிறது. இதனால் மொத்த குடும்பமும் முத்துவுக்கு எதிராக இருக்கிறார்கள். ஆனால், முத்து மீது எந்த தவறும் இல்லை என்று மீனா புரிந்து கொள்வாரா? மீனா தம்பியின் சுயரூபம் தெரிய வருமா? என்று விறுவிறுப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 7.08 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியல் குடும்ப பெண்களின் போராட்ட கதை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் 6.50 புள்ளிகளை பெற்று 9வது இடத்தையும், ஆஹா கல்யாணம் சீரியல் 5.86 புள்ளிகளை பெற்று 10வது இடத்தையும் பிடித்து இருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news