டிஆர்பி ரேட்டிங்கில் 2025 ஆம் ஆண்டில் 25வது வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.

வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதோட டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த இரு சேனல்களின் சீரியல்கள் தான் மாறி மாறி முதலிடம் பிடிக்கிறது.
சீரியல் டிஆர்பி ரேட்டிங்:
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டின் 25வது வாரத்தில் டிஆர்பியில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. சீரியல்கள் பட்டியல் இதோ,

மூன்று முடிச்சு & மருமகள்:
கடந்த வாரம் சன் டிவியில் மகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. மூன்று முடிச்சு, மருமகள் சீரியல்கள் தான் மகா சங்கமத்தில் இணைந்து இருக்கிறார்கள். இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 9.80 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த மூன்று முடிச்சு சீரியலில் ஸ்சுவாதி கதாநாயகியாகவும், இவருக்கு ஜோடியாக நியாஸ் ஹீரோவாக நடிக்கிறார்கள். அதேபோல் மருமகள் சீரியலில் கேப்ரியல்லா ஹீரோயினாகவும், ராகுல் ஹீரோவாகவும் நடிக்கிறார்கள்.

சிங்க பெண்ணே:
வாரம் வாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ‘சிங்க பெண்ணே’ சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.36 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ஆனந்தி. ஒருவழியாக ஆனந்தி-அன்பு காதல் தெரிய வருகிறது. ஆனந்தி தனக்கே தெரியாமல் கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அவர் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

கயல்:
கயல் சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.27 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறது. தனது குடும்பத்திற்காக எல்லா சந்தோசத்தை இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல். அடுத்தடுத்து கயலுக்கு பல தொந்தரவுகள் வந்த நிலையில் தற்போது கயலின் திருமண வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு இந்த தொடரை ஒளிபரப்பி வருகிறார்கள்.

சிறகடிக்க ஆசை:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 7.87 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தில் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை தான் சீரியல்.

அய்யனார் துணை:
விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பட்ட தொடர் தான் அய்யனார் துணை. இந்த சீரியலில் மதுமிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. டிஆர்பி ரேட்டிங்கில் இந்த தொடர் 7.62 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.






