Trpயில் டாப் 10ல் இருக்கும் சீரியல்களின் லிஸ்ட் – முதல் 6 இடத்தையும் ஆக்கிரமித்த ஒரே சேனல்

0
2051
- Advertisement -

சின்னத்திரை சீரியல்களின் இந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். குறிப்பாக, தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இதனால் ரசிகர்கள் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி திகழ்கிறது. அதேபோல் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல் தான் முன்னிலை வகுத்து வருகிறது.

- Advertisement -

டிஆர்பி பட்டியல்:

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதில் முதல் ஆறு இடங்களை சன் டிவி பிடித்து இருக்கிறது. அந்த பட்டியல் இதோ,

கயல்:

தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் தான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இது தன் குடும்பத்திற்காக ஆசை, சந்தோசம் எல்லாத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் எழில், கயலின் திருமண ட்ராக் தான் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

எதிர்நீச்சல் சீரியல்:

டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு காரணம், சொத்து ட்ராக் தான் பரபரப்பாக சென்றது. தற்போது இந்த சீரியல் உச்சகட்டமாக சென்றது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்கள் உரிமையை மையமாக கொண்ட கதை. அதுமட்டுமில்லாமல் நாளுக்கு

நாள் ஆதி குணசேகரன் ஸ்கோர் செய்து வருகிறார்.

சுந்தரி:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் சுந்தரி. தற்போது இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது

வானத்தைப்போல:

இந்த தொடர் டி ஆர் பி ரேட்டிங்கில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. அண்ணன்- தங்கை சென்டிமென்ட்டை மையமாக கொண்ட கதை. இந்த தொடர் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி இருக்கிறார். தற்போது இந்த சீரியலில் பொன்னி சின்ராசுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். ராஜபாண்டிற்கு துளசியின் கர்ப்பம் கலைந்த உண்மை தெரிந்தவுடன் அவரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். துளசி என்ன அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்ற பரபரப்புடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

மிஸ்டர் மனைவி:

இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாவது இடத்தை பிடிக்கிறது. இந்த தொடரும் சமீபத்தில் தான் புதிதாக ஒளிபரப்பானது. இந்த சீரியலில் ஹீரோவாக பாவன் ரவிச்சந்திரன், ஹீரோயினாக ஷபானாவும் நடிக்கிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது சீரியலில் ஷபானாவுக்கும் பாவனுக்கும் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

இனியா:

இந்த சீரியல் டிஆர்பியில் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது. சமீபத்தில் தான் இந்த தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடரில் ஆலியா மானசா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

இதனை அடுத்து ஏழாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பிடித்திருக்கிறது. தற்போது இந்த சீரியலில் இனியா-பாக்யா கல்லூரி செல்லும் டிராக் தான் விறுவிறுப்பாக செல்கிறது. இதனை அடுத்து எட்டாவது எட்டாவது சிறகடிக்கும் ஆசை சீரியல், ஒன்பதாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிடித்திருக்கிறது. பத்தாவது இடத்தை அன்பே வா சீரியல் பிடித்திருக்கிறது.

Advertisement