தனுஷ் இங்கிலிஷ்ஷை கேட்டு சிரித்த கஜோல் – சமாளித்துள்ள தனுஷ் – வைரலாகும் வீடியோ. (பாலிவுட்க்கு இதான் வேல போல)

0
19673
kajol
- Advertisement -

இந்திய நடிகர்களில் ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து வந்தனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, நொபொலீயன் என்று ஒரு சிலர் மட்டுமே கால்பதித்து இருந்தனர். ஆனால், இளைய தலைமுறை நடிகர் நடிகைகளில் யாரும் யாரும் ஹாலிவுட் படத்தில் நடித்தது இல்லை. அந்த குறையை தீர்த்து வைத்தவர் நடிகர் தனுஷ் தான். தமிழ் சினிமாவின் ஸ்லிம் சிவாஜி, தென்னெக ப்ருஸ்லீ, நடிப்பு அசுரன் என்று பல்வேறு பட்டப் பெயர்களால் அழைக்கப்படுவர் தனுஷ்.

-விளம்பரம்-

தமிழில் பல படங்களில் தனது அசுரத்தனமான நடிப்பை நிரூபித்த தனுஷ், ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.அதே போல ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அதை தொடர்ந்து சமிதாப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடித்து இருந்தார். இப்படி கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற தனுஷ், The Extraordinary Journey of the Fakir என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால்பதித்தார்.

இதையும் பாருங்க : Full போட்டோ கிடைக்குமா ? மாலத்தீவில் மாளவிகா பதிவிட்ட நீச்சல் உடை புகைப்படத்தில் கதறும் நெட்டிசன்கள்.

- Advertisement -

தற்போது ‘The Gray man’ என்ற மற்றொரு ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்து உள்ளார் தனுஷ். என்னதான் நடிப்பு அசுரன் என்று போற்றப்பட்டாலும் தனுஷ் பல கேலிகளை கடந்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் பேட்டி ஒன்றில் பேசிய ஆங்கிலத்தை கேட்டு பாலிவுட் நடிகை கஜோல் நக்கலாக சிரித்துள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், அதில் நடிகர் தனுஷ் என் இங்கிலிஷ் கொஞ்சம் மோசம்னு எனக்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.

நடிகை கஜோல், தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2 ‘ படத்திலும் ஒரு வில்லியாக நடித்து இருந்தார் என்பது கூறிப்பிடத்தக்கது. ஆனால், முதல் பாகம் அளவிற்கு இந்த படம் வெற்றியடையவில்லை. இப்படி ஒரு நிலையில் தன் உடன் நடித்த நடிகரிடமே கஜோல் இப்படி நடந்துகொண்டு உள்ளது தனுஷ் ரசிகர்களை சீண்டி இருக்கிறது.

-விளம்பரம்-

பாலிவுட், தனுஷை கேலி செய்வது இது ஒன்றும் புதிது அல்ல, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் தனுஷை ‘The Little Things’ என்ற பாலிவுட் சீரிஸ் ஒன்றில் கேலி செய்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தது. மேலும், அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது என்றால், நீ உன் முகத்தை பார்த்திருக்கிறாயா தனுஷ் ? நீ அப்படியே அவரை போல தான் இருக்கிறாய், நீங்கள் இருவரும் தனுஷ் மற்றும் சோனம் கபூரை போல இருக்கீங்க.

என்ன ஒரு வித்யாசம், இவன் தனுஷ் சூப்பர் மாடலாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்கார் என்று அந்த வீடியோவில் தனுஷ் பெயரை வைத்து கேலி செய்து இருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ தனுஷ் ரசிகர்கள் பலரும் பாலிவுட் சீரிஸ் இயக்குனரை கழுவி ஊற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement