WWE ரிங்கில் மைக் பிடித்து தமிழில் பேச வேண்டும் – தமிழ் நாட்டின் முதல் ப்ரோ ரெஸ்லிங் சாம்பியன்.

0
2839
jeyjackson
- Advertisement -

WWE ரிங்க் என்பது தமிழகத்தில் இருக்கும் பல தலைமுறை இளைஞர்களின் கனவு. அந்த சண்டையை பார்க்க செல்வதே அவ்வளவு எளிதானதல்ல. அப்படி பல வீரர்கள் கண்ட கனவை நிஜமாக்கிய ஒரு தமிழ் இளைஞர் ஜெய் ஜாக்சன். இவர் ப்ரோ ரெஸ்லிங் உலகின் முதல் தமிழனாக சாதனை படைத்தவர். ஜெய் ஜாக்சன் CWE-யின் நேஷனல் சாம்பியன். இவரிடம் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் பல முக்கியமான விசயங்களைப் பகிர்ந்துகொண்டார். இவருடைய உண்மையான பெயர் ஜெயபாண்டியன். இவர் திண்டுக்கல் மாவாட்டம் நிலக்கோட்டை பக்கத்தில் முத்துக்காமன்பட்டி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

-விளம்பரம்-
Jey Jackson

இவருக்கு சிறு வயதிலிருந்தே ரெஸ்லிங் விளையாடுவதில் அதிக ஆர்வம். அதனால் தான் இவர் WWE க்கு செல்ல அடித்தளமாக இருந்தது. இவர் அதில் நுழைவதற்கு என்ன செய்வது என பல முயற்சிகள் செய்தார். அப்படித்தான் ஒருநாள் WWE-யை கலக்கின இந்தியன் சூப்பர் ஸ்டார் தி கிரேட் காளி அவர்கள் பஞ்சாபில் 2015 ஆம் ஆண்டு CWE என்ற ரெஸ்லிங் நிறுவனம் ஆரம்பித்தார். இவருக்கு WWE ரிங்கில் மைக் பிடித்து தமிழில் பேச வேண்டும் என்பது தான் மிகப்பெரிய ஆசையாம்.

இதையும் பாருங்க : அட, மறைந்த சிங்கம்பட்டி ஜமீன், நடிகர் பிரேமிற்கு இப்படி ஒரு சொந்தக்காரறாம்.

- Advertisement -

நல்ல ரெஸ்லருக்கான அழகு மைக் பிடித்து பேசுவதும் ஒன்று தான். இவர் தமிழில் ப்ரோமோ கட் பண்ண வேண்டும் அதைக் கேட்டு தமிழ் ரசிகர்கள் ஆரவாரம் ஆக வேண்டும் என்பது தான் ஆசையாம் . பிறகு WWE-ல் ஒரு சாம்பியன்ஷிப் ஜெயிப்பதும் இவர் ஆசை என்று ஜெய் ஜாக்சன் சொன்னார். இவர் தனது முதல் மேட்சில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். இவர் முதல்நாள் செல்லும் போது மற்ற ரெஸ்லர்களை எல்லாம் பார்க்க பல்கா இருந்தார்களாம்.

அப்போ தி கிரேட் காளி எப்படி இருப்பார் என்று இவருக்கு பார்க்க ஆர்வம் அதிகமாயிற்று. பின் மூன்று நாள் கழித்து தான் அவரை சந்தித்தாராம். அப்போது அவர் ரிங்கில் உட்கார்ந்து போன் பார்த்துட்டு இருந்தார். திடீர்னு இவரை பார்த்து கண் அடிச்சாராம். WWE ரிங்கில் அண்டர்டேக்கரையே தூக்கி வீசிய மனுஷனா இவர் என்ற வியப்பில் பார்த்தாராம். அடுத்து ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ண ஆரம்பித்த போது தொடங்கியதாம் இவர்கள் நட்பு. இப்போ அவர் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார் ஜெய்.

-விளம்பரம்-
Advertisement