அது நாங்க இல்லை சார்..!சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் அதிர்ச்சி..!

0
1487
- Advertisement -

புதிய திரைப்படங்கள் சுலபமாக ஹேக்கிங் என்ற பெயர் மூலம் படம் ரிலீஸ்சாவதற்க்கு முன்பாகவே அந்த படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுகின்றனர். பைரசி உரிமத்தை திருடும் இந்த கூட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு வலைத்தளம் தான் தமிழ் ராக்கர்ஸ்.சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தை HD தரத்தில் இணையத்தில் வெளியிடுவோம் என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

-விளம்பரம்-

Tamilrockers

- Advertisement -

எனவே, சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று சன் நெட்வொர்க் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அம்மனுவில், 3 ஆயிரத்து 710 இணையத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு அந்த இணையதளங்களை முடக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்நிலையில் சர்கார் படத்தின் ஹெச்.டி பிரிண்ட் விரைவில் இணைதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்ராக்கர்ஸ் பெயரில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியிலும், திரைப்பட உரிமையாளர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் குறிப்பிட்டது போலவே சர்கார் படமும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது.

-விளம்பரம்-

ஆனால்,நாங்கள் ட்விட்டர் உட்பட எந்த ஒரு சமூகவலைதளங்களிலும் இல்லை, எங்கள் பெயரை பயன்படுத்திப் பதிவிடப்படும் எதுவும் உண்மை கிடையாது. அவற்றில் வரும் தகவல்களை நம்பாமலும், பரப்பாமலும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று தங்கள் இணையதள பக்கத்தின் முகப்பில் கூறியுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

Advertisement