தவெக மதுரை மாநாட்டில் விஜய் கட்சி உறுப்பினர்கள் செய்த செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.

இதை அடுத்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இதை அடுத்து இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
விஜய் அரசியல்:
வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்திருந்தார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் விஜய் நடத்தி இருந்தார். இதை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதில் விஜய் பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். இதை அடுத்து தேர்தல் பணியில் விஜய் மும்முராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.

விஜய் கட்சி:
இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் விஜயின் கட்சியுமே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இரண்டாவது மாநாட்டிற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது இரண்டாவது மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடக்கிறது.
தவெக மாநாட்டில் பொய் செய்திகளை பரப்புவதற்காக வந்ததாக கூறி யூடியூபர் முக்தார் தவெக தொண்டர்களால் விரட்டி அடிக்கப்பட்டார்.🤣😂😂 @AMuktharAhmed1
— RafeekRaja (@RafeekRajaTVK) August 21, 2025
சிறப்பான சம்பவம் 💯#TVKMaduraiMaanadu #TVKVettriMaanadu @NellaiTVKITWing @TVKHQITWingOffl pic.twitter.com/n6dO5RkK08
இரண்டாவது மாநாடு:
விஜயை சந்திக்க மக்களுமே இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த மாநாட்டிற்கு நேற்று இரவு முதலில் தொண்டர்கள் குவிய தொடங்கி விட்டார்கள். மாலை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை மாநாடு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால், தொண்டர்களின் வரவு அதிகரித்திருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சிற்காக அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மாறுவேடத்தில் போன மனங்கேட்ட உ.பி முக்தார் துரத்தியடிக்கப்பட்டதால் சக உ.பிக்கள் மனவேதனை
— Jebakumar Arulnathan (@Jeba_here) August 21, 2025
டேய் அசிங்கம் புடிச்சவனே @AMuktharAhmed1 உனக்கு இந்த அவமானம் தேவையா?
நல்லா தேடுங்க கூட்டத்துல கோழி திருடன் மாதிரி உ.பி எவனாவது முழிச்சிட்டு இருப்பான் pic.twitter.com/Ei5jijMMuP
மாநாடு சர்ச்சை வீடியோ:
இது ஒரு பக்கம் இருக்க, விஜயினுடைய மாநாடு தொடர்பாக பல தவறான செய்திகளும் மீம்ஸ்களும் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் இந்த மாநாட்டிற்கு youtuber முக்தார் முகமூடி அணிந்து உள்ளே நுழைந்து இருக்கிறார். இவரை பார்த்தவுடன் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் அவரை விரட்டி வெளியே அனுப்பி இருக்கிறார்கள். இவர் மாநாட்டிற்குள் செய்தி சேகரிப்பது போல உள்ளே நுழைந்து அவதூறு பரப்பியதற்காக தான் அவரை விரட்டி அடித்திருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.






