MeToo என்பது, “நானும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்” என்ற அர்த்தத்தோடு பகிரப்படும் ஒரு வாக்கியம்.தங்களை பாலியல் ரீதியாக சீண்டிய ஆண்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் பெண்கள் முன்னெடுத்த ஒரு இணைய போராட்டம் தான் இந்த #MeToo. இந்த போராட்டத்தை தொடங்கியவர், Alyssa Milano என்ற அமெரிக்க நடிகை. 2017ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த hash tag இயக்கம், அமெரிக்காவில் மட்டுமில்லாமல் இந்தியா உடபட பல நாடுகளில் பெரும் புயலைக் கிளப்பியது.

சமூக வலைதளத்தில் இயங்கும் பெண்களில், சுமார் 45 சதவீதத்திற்கு மேற்பட்டோர், metoo hash tag-யை பதிவிட்டு, தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை குறிப்பிடத் தொடங்கினர்.இதில் அதிகம், சர்ச்சையில் சிக்கியது பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் Harvey Weinstein தான். இவர் மீது மட்டும் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதன் விளைவாக, அமெரிக்க போலீஸ் அவரை கைது செய்தது.

Advertisement

இந்தியாவிலும் உருவெடுத்த #MeToo :-

இந்தியாவிலும், இந்த hash tag பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர், Utsav Chakraborty மீது ஒரு இளம்பெண் புகார் தெரிவித்தார். தொடர்ந்து பல பெண்கள் புகார் தெரிவிக்க, வேறு வழியில்லாமல், Utsav Chakraborty-யும் மன்னிப்பு கேட்டார். இதே போல பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் மற்றும் ராஜத் கபூரும், #Metoo hash tag-ல் சிக்கி, பின்னர் மன்னிப்பு கேட்டார். பிரபல இந்தி நடிகர் நானா படேக்கர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா, பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால் அதை நானா படேகர் மறுத்தார்.

தனுஸ்ரீ தத்தா #MeToo குற்றசாட்டு :-

பாலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகையாக இருந்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர், விஷால் உடன் இணைந்து தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், பாலிவுட் இயக்குனர் நானா படேகர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.இது குறித்து தனுஸ்ரீ தத்தா கூறுகையில், எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் போது கிட்டத்தட்ட 200 பேர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. மேலும், என்னோட காரையும் தாக்கும் போது உதவிக்கு வரவில்லை.

Advertisement

தனுஸ்ரீ தத்தா முன் வைத்த புதிய குற்றசாட்டுகள் :-

தற்போது தனுஸ்ரீ தத்தா மீண்டும் புதிய குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருக்கிறார். அவருக்கு நடந்த கார் விபத்து, கார் பழுதானதற்கெல்லாம் யாரோ ஒருவர்தான் காரணம் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் அழுத்தத்தில் இருக்கிறேன். அதற்காக நான் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன். நான் குறிவைத்து மிகவும் மோசமாக துன்புறுத்தப்படுகிறேன். தயவுசெய்து யாராவது உதவி செய்யுங்கள்.

Advertisement

MeToo ல் குற்றம் சாட்டியதற்காக பழி வாங்கும் கும்பல் :-

இங்கேயே இருந்து எனது நடிப்பில் கவனம் செலுத்துவேன். பாலிவுட் மாபியாக்களும், அரசியல்வாதிகளும், சமூக விரோத கிரிமினல்களும் சேர்ந்து கொண்டு என்னை துன்புறுத்துகின்றனர். இவை அனைத்திற்கும் #metoo நான் குற்றம்சாட்டியவர்கள்தான் காரணமாகும். அநீதிக்கு எதிரான நின்றதற்காக துன்புறுத்தப்படுவது இது எந்த மாதிரியான இடம்?. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவேண்டும். இங்கே அனைத்து விஷயங்களும் கையைவிட்டு போகின்றன. இதனால் என்னைப்போன்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இன்று எனக்கு நடப்பது நாளை உங்களுக்கு நடக்கலாம் என்று தெரிவித்தார்.

Advertisement