சன் டிவியின் இந்த ஒற்றை சீரியலின் trpயை முறியடிக்க முடியாமல் தினறும் விஜய் டிவி சீரியல்கள் – இரண்டு சேனலின் டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்

0
882
tamilserials
- Advertisement -

பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. சீரியல் மட்டும் இல்லாமல் காமெடி ஷோ, பலவித ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள், வெரைட்டி வெரைட்டியான நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. ஆகவே மக்கள் வெள்ளித்திரைக்கு அதிகம் செல்வதை விட சின்னத்திரையை தான் அதிகம் கவனிக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைக்களத்துடன் புதுபுது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்:

மேலும், சீரியல்கள் முதல் ரியாலிட்டி ஷோக்கள் என தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. சன் டிவியில் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அதிலும் பூவே உனக்காக, மகராசி, திருமகள், பாண்டவர் இல்லம், சித்தி-2, சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், சுந்தரி, கயல், வானத்தைப்போல, கண்ணான கண்ணே, ரோஜா, எதிர்நீச்சல், அன்பே வா போன்ற பல சீரியல்களை சன் டிவி ஒளிபரப்பி வருகிறது.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ:

அதிலும் காலை நேரத்தில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள், உதிரிப்பூக்கள், நந்தினி, மெட்டிஒலி என்ற பழைய சீரியல்களையும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒளிபரப்பி வருகிறார்கள். அதேபோல ரசிகர்களின் பேவரட் சேனலாக விஜய் டிவி விளங்கி வருகிறது. விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோ தான் என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்கள். முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கியது விஜய் டிவியில் தான். மேலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் பிரபலத்திற்கு இணையாக சீரியல்களும் பிரபலமாக இருக்கின்றன. சன்டிவி போலவே விஜய் டிவியிலும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்:

காலை 9 மணி முதல் ஒரு மணி வரை முன்தினம் ஒளிபரப்பான சீரியல்களை டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. பிறகு மதியம் காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து எண்ணை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே 2, செந்தூரப்பூவே, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மௌனராகம் 2, தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 என பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. இப்படி சன் டிவி மற்றும் விஜய் டிவிகளில் தான் அதிக சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சேனல்களின் இடையில் தான் டிஆர்பி மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது.

டாப் 5ல் உள்ள சீரியல்கள்:

இந்த நிலையில் சமீபத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் டாப் 5 இடங்களில் இருக்கும் சீரியல்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பட்டியல் இதோ,

சன்டிவி:

கயல்

வானத்தைப்போல

சுந்தரி

ரோஜா

கண்ணான கண்ணே

விஜய் டிவி:

பாக்கியலட்சுமி

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாரதிகண்ணம்மா

ராஜா ராணி 2

தமிழும் சரஸ்வதியும்.

இப்படி இரு சேனல்களின் டாப் 5 இடங்களில் இருக்கும் சீரியல்களின் பட்டியல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் பலரும் டேக் செய்து லைஸ்க்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகிறார்கள்.

Advertisement