போதை பொருள் சர்ச்சையில் சிக்கிய திரிஷா பட நடிகர்.! விபத்தை ஏற்படுத்தி விட்டு எஸ்கேப் ?

0
2204
Tharun
- Advertisement -

தமிழில் திரிஷா நடித்த எனக்கு 20 உனக்கு 18 படத்தில் ஹீரோவாக நடித்த தருன் அதிவேகமாக காரில் சென்று விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியதாக ஒரு தகவல் வைராலகி வருகிறது. இன்று அதிகாலை வேளையில் ஹைதராபாத்தில் அவுட்டர் ரிங் ரோடில் தன்னுடைய வால்வோ காரில் சென்றபோது ரோட்டில் உள்ள தடுப்பை இடித்துவிட்டு நடிகர் தருன் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Image result for Actor Tarun

விபத்தை ஏற்படுத்திய காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரதித்ததில் அந்த கார் ஒரு நிறுவனத்தில் பெயரில் பதிவாகியுள்ளதாக தெரியப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து நடிகர் தருண் அளித்துள்ள விளக்கத்தில், எனக்கும் அந்த விபத்திற்கு சம்மந்தமே இல்லை என்றும் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் அந்த நேரத்தில் தான் வீட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : மதுமிதாவிற்கு நடந்தது என்ன.! முதன் முறையாக விளக்கமளித்த அபிராமி.! 

- Advertisement -

நடிகர் தருண் தன்னுடைய 11 வயதில் அஞ்சலி படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை பெற்றார் தருண். அதன் பின்னர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மலையாள மொழியிலும் சிறந்த குழந்தை நட்சத்திர தேசிய விருது பெற்றார். 

பின்னர் 2000ஆம் ஆண்டு ஹீரோவாக தெலுங்கு மொழியில் அறிமுகம் ஆனார். நுவ்வே காவாளி என்ற இந்த படமும் சிறந்த படத்திற்கான தேசிய விருதினை பெற்றது. தருண் தமிழிலும் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில் காதல் சுகமானது, புன்னகை தேசம், எனக்கு 20 உனக்கு 18 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இறுதியாக 2014ஆம் ஆண்டு யுத்தம் என்ற படத்திலும் நடித்தார் தருண். கடந்த வருடம் தெலுங்கு சினிமா நடிகர்கள் பலர் மீது தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயனப்டுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement