அஜித்துக்கு ‘தல’ ன்னு பெயர் வைத்தது இவர்தான்.. முருகதாஸ் இல்லை !

0
2673
ajith

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் தல அஜித்.இவருக்கு ‘தல’ எனும் பெயர் எப்படி வந்தது என்றால் இயக்குனர் முருகதாஸ் இயக்கிய ‘தீனா’ படத்தில் அஜீத்குமார் நடித்திருந்தார் .இந்த படம் மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
Thala ajith இந்த படத்தில் அஜீத்குமாரின் பெயர் தீனா.அவர் அந்த படத்தில் ரவுடியாக நடித்திருப்பார்.அதிகமாக அந்த படத்தில் அவரை ‘தல தல ‘ என்று தான் அழைப்பார்கள்.இந்த படத்தில் இருந்து தான் அஜித்துக்கு தல எனும் பெயர் வந்தது .இதனால் தான் நடிகர் அஜித்குமாரை தமிழகமே ‘தல ‘ என்று அழைத்து வருகிறது .

இதையும் படிங்க: விஜய் அண்ணா, நீங்க இல்லாம நான் இந்த நிலைக்கு வந்து இருக்க முடியாது – பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

- Advertisement -

இந்த பட்டத்தை அஜித்துக்கு வைத்தவர் இயக்குனர் முருகதாஸ் இல்லையாம். அந்த படத்தில் உதவி இயக்குனராய் பணியாற்றிய மோகன் என்பவர் தான் அஜித்துக்கு இப்படி ஒரு பட்டத்தை கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
ajith அதன் பிறகு அந்த படத்தில் அவரை தல என்று அழைத்தனர்.இப்போது ‘தல’ என்றாலே தெரியாதவர்கள் யாருமே இல்லை.

Advertisement