இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த தலை வாசல் விஜய்யின் மகள். இவருக்கு இவ்வளவு பெரிய மகளா ?

By Rajkumar · 13/12/2019

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் தலைவாசல் விஜய். தற்போது தலைவாசல் விஜய்யின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று கொடுத்து உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தலைவாசல் விஜய் அவர்கள் திரைப் பட நடிகர் மட்டுமல்லாமல் குரல் ஒலிச்சேர்க்கை கலைஞரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த "தலைவாசல்" என்ற படத்தில் தான் முதன் முதலாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தான் இவரை 'தலைவாசல் விஜய்' என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இவர் தன்னுடைய 25 வருட சினிமா வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

மேலும், இவர் சினிமா படங்களில் நடிகர், குணச்சித்திர நடிகர்,வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். அதோடு தலைவாசல் விஜய் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது 'கவலைப்படாதே சகோதரா' என்ற பாடல் தான். இந்த பாடல் இன்னும் ரசிகர்கள் மத்தியில் நீங்காமல் இடம் பிடித்து உள்ளது. நடிகர் தலைவாசல் விஜய் அவர்கள் கடைசியாக 100% காதல் என்ற திரைப் படத்தில் நடித்து உள்ளார். தற்போது தலைவாசல் விஜய் அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'அழகு' சீரியலில் நடித்து வருகிறார். தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் சிறு வயதிலிருந்தே நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று உள்ளார்.

இதையும் பாருங்க : ரோபோ ஷங்கரா இது. திருமணத்தின் போது எப்படி இருந்திருக்கிறார்னு பார்த்தா ஷாக்காவீங்க.

மேலும், நேபால் தலை நகரமான காத்மாண்டுவில் 13வது தெற்காசிய போட்டி சமீபத்தில் நடை பெற்றது. இந்த போட்டியில் பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். நம்முடைய இந்தியா சார்பில் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணாவும் நீச்சல் போட்டியில் பங்கேற்று விளையாடினர். மேலும் ஜெயவீனா விஜய் அவர்கள் தனது பன்னிரண்டு வயதில் இருக்கும் போதே தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்று பல பரிசுகளை வென்று இளம் வயதில் நீச்சல் வீராங்கனையாக வலம் வந்தவர். இதில் தலைவாசல் விஜய் மகள் ஜெயாவீனா கலந்து கொண்டார். இந்த போட்டியை பார்பதற்காக தலைவாசல் விஜய் அவர்கள் நேபால் சென்று இருந்தார். இந்த போட்டியில் ஜெயாவீனா அவர்கள் 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோரக் பிரிவின் வெள்ளிப் பதக்கம் பெற்று இரண்டாவது இடத்தை பெற்று உள்ளார்.

தலைவாசல் விஜய் தன் மகள் வெள்ளிப் பதக்கத்தை பெற்ற மகிழ்ச்சியில் உறைந்து போனார். மேலும், தன் மகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதை பார்த்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என மொத்தம் 312 பதக்கங்களை பெற்று உள்ளது. 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் எல்லாவற்றிலும் இந்தியா முதல் இடத்தையும், 2-ஆம் இடத்தையும் நேபாள், 3-ஆம் இடத்தை ஸ்ரீலங்காவும் பிடித்து உள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full