காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் காமெடியனாக கலக்கிவருகிறார். ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அப்போது பாடி பில்டராக இருந்த அவர் மேடை காமெடியனாக அறி முகமானர் அதன் பின்னர் தொகுப்பாளராகவும்,நடன கலைஞராகவும் இருந்து வந்தார். பின்னர் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர் அதில் முத்த மகள் இந்திரஜா தான் தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும். அவள் பிறந்த பின்னர் தான் எனக்கு பல நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது என்று ரோபோ ஷங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் ரோபோ ஷங்கரின் மூத்த மகளான இந்த ராஜா சமீபத்தில் வெளியானபிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணி வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இந்தரஜா.
இதையும் பாருங்க : சபரி மலையில் இருந்து திரும்பிய கையோடு கோர்ட்டுக்கு சென்ற சிம்பு. வீட்டுக்கு அனுப்பிய நீதிபதி.
ரோபோ ஷங்கர் மகளான இந்திரஜா பிகில் படத்திற்கு முன்பாக டிக் டாக் செயலியில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவை பார்த்த அட்லி இவரது நடிப்பை கண்டு வியந்து போய் பின்னர் இவருக்கு பிகில் படத்தின் வாய்ப்பினை கொடுத்தார். தனது மகள் முதல் படத்திலேயே விஜயுடன் நடிப்பதை எண்ணி ரோபோ சங்கர் கண்ணீர் மல்க ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் செய்திருந்தார்.தற்போது தமிழ் திரையுலகில் அப்பா மற்றும் மகள் இருவரும் புகழின் உச்சிக்கே சென்று விட்டார்கள்.
மேலும் பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் தனது மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாகவும் ரோபோ ஷங்கர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு நடிகர் ரோபோ ஷங்கர் படு ஒல்லியாக இருப்பதை கண்டு வியந்து போயுள்ளார்கள்.