தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே சினிமாவில் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க சில இயக்குனர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது அந்த படத்திற்கான பணிகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘குயின்’ என்ற பெயரில் வெப் சீரியஸாக எடுத்து வெளியிட்டார் இயக்குனர் கௌதம் மேனன். இப்படி ஒரு நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற படம் உருவாகி வருகிறது. ஏ எல் விஜய் இயக்கி வரும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணவ்த் நடிக்கிறார்.

Advertisement

இவர், தமிழில் ஜெயம் ரவி நடித்ததாம் தூம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்திற்காக நடிகை கங்கனா தமிழ் மொழியை கூட கற்றுவந்தார்.தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கும் எம் ஆர் ராதாவிற்க்கும் மோதல் ஏற்பட்டபோது எம் ஜி ஆரை எம், ஆர் ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த சம்பவங்களை வைத்து இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்த படத்தில் எம் ஜி ஆராக அரவிந்த் சாமி நடிக்கிறார். சமீபத்தில் கூட அரவிந்த் சாமியின் சிறு டீசர் ஒன்று வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா சினிமா வாழ்கை முதல் அரசியலில் அவர் எதிர்கொண்ட சவால்கள், அவமானங்கள் அனைத்தையும் இந்த ட்ரைலர் காண்பித்துள்ளது. மேலும், இந்த படத்தின் மூலம் கங்கனா ரணாவத் மேலும் ஒரு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதர்க்கு இல்லை.

Advertisement
Advertisement