தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில், இளைய தளபதி விஜய் அவர்களின் 63வது படமான “பிகில்” படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் திருவிழா போல கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும்,180 கோடி பட்ஜெட்டில் உருவான பிகில் படம் கிட்ட தட்ட 300 கோடி ரூபாய் வரைக்கும் வசூல் செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து விஜய் அவர்களின் நடிப்பில் “தளபதி 64” படத்தை கைதி படத்தை இயக்கிய சூப்பர் ஹிட் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்க வருகிறார்.

டெல்லியில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக முடிவடைந்து. தற்போது சென்னையில் தொடங்க உள்ளது. மேலும், கத்தி படத்திற்கு பிறகு அனிருத் அவர்கள் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார் என்ற தகவல் தெரிந்தவுடன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், விஜய் சேதுபதி ஸ்ரீமன், மாளவிகா மோகனன் என்று பலர் நடிக்கும் இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்த தான். இந்த படத்தினை எக்ஸ் பி பிலிம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதையும் பாருங்க : வீட்டில் பிணமாக கிடந்த நடிகை. இறப்பதற்கு ஒரு நாள் முன்பாக முகநூலில் போட்ட பதிவு.

Advertisement

கடந்த சில காலமாக இந்த படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்த எக்ஸ் பி பிலிம் நிறுவனம் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தது. அதில், தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு தயாராக இருங்கள் என்று பிகில் படத்தை தயாரித்து இருந்த ஏ ஜி எஸ் நிறுவனத்தை டேக் செய்து இருந்தது.கடந்த சில நாளுக்கு முன்னர் விஜய், திரையுலகில் 27 ஆண்டுகளை பூர்த்தி செய்த நாளின் கொண்டாட்டத்தின் போது ஏ ஜி எஸ் நிறுவனம் எக்ஸ் பி பிலிம் நிறுவனதிடம் அப்டேட் கேட்டு ட்வீட் ஒன்றை செய்து இருந்தது.

Advertisement

எனவே, அதற்கு பதில் அளித்து தான் எக்ஸ் பி பிலிம் நிறுவனம் இப்படி ட்வீட் செய்துள்ளது. எனவே, விரைவில் தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர். ஆனால், தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு குறித்து ட்வீட் போட்டது போலியான எக்ஸ் பி பிலிம் நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு என்று தெரியவந்துள்ளது. எனவே, தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து வந்த செய்தி போலியானது என்று உறுதி செய்யப்படுள்ளது.

Advertisement
Advertisement