முகமூடி படத்திற்கு 30 லட்சம், ஆனால் தளபதி 65 படத்திற்கு வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா ?

By Rajkumar · 4/5/2021

தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'முகமூடி'. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். 'சூப்பர் ஹீரோ' படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.

இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு 'ஒக்க லைலா கோஷம்' என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து வருண் தேஜின் 'முகுந்தா' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே.

இதையும் பாருங்க : அடடே மேடம் நீங்களே திருட்டு திராவிட சொம்பு தான? ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன பிரியா பவானியை கேலி செய்த நபர் - அதற்கு அவர் கொடுத்த பதிலடியை பாருங்க.

தெலுங்கு திரையுலகுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த பூஜா ஹெக்டே, அடுத்ததாக பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்தார். 'மொகெஞ்ச தாரோ' என்ற படத்தில் ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹரிதிக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே.இப்படி இந்தி, தெலுங்கு என்று பிசியாக நடித்து வரும் பூஜா சமீபத்தில் அல்லு அர்ஜுனாவுடன் இவர் இணைந்து நடித்த 'அல வைகுந்தபுரமுலோ' என்ற தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட்டானது.

தற்போது இவர் தான் தளபதி 65 படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது தென்னிந்திய மொழிகளில், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது.எனவே சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம் பூஜா ஹெக்டே.இது நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு இணையானது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கில் மகேஷ்பாவுடன் நடித்தபோது ரூ.2 கோடி சம்பளம் வாங்கினாராம். ஆனால், இவர் முகமூடி படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ? வெறும் 30 லட்சம் தான்.

behindtalkies AMP · Quick view
View full