அடடே மேடம் நீங்களே திருட்டு திராவிட சொம்பு தான? ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன பிரியா பவானியை கேலி செய்த நபர் – அதற்கு அவர் கொடுத்த பதிலடியை பாருங்க.

0
1422
priya

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.

கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி நேற்று (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்றுது. இதில் ஆரம்பம் முதலே பல்வேறு தொகுதிகளில் தி மு க தான் முன்னிலை வகித்து வந்தது. இப்படி ஒரு நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியில் அமருகிறது.

- Advertisement -

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இலயோலா கல்லூரி வளாகத்தில் பெற்றுக் கொண்டு, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். முதன் முறையாக முதலமைச்சராக பதிவு ஏற்கப்போகும் ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பவானி சங்கர், ஸ்டாலனிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில், நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின். அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம்.வாழ்த்துகள்” என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பல மாதங்களுக்கு முன், திருமுருகன் காந்தியை வெளியிட வேண்டும் என்று பிரியா பவானி சங்கர் போட்ட பதிவை பதிவிட்டு ட்விட்டர் வாசி ஒருவர், அடடே மேடம் நீங்களே திருட்டு திராவிட சொம்பு தான? என்று கேலி செய்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி, பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் journalista இருந்திருக்கேன். என் வேலையே அதுதான. இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement