‘படம் ஆரம்பிச்ச 10 நிமிசத்துல அவள போட்டு தள்ளிட்டு படத்த கொண்டு போற’ – விஜய் 66 ஹீரோயின் அறிவிப்பால் கடுப்பான ரசிகர்கள்.

0
733
vijay66
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த், கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய படத்தை இயக்குவதற்காக பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் காத்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் ட்ரைலர்:

பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ட்ரெய்லரில் ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால் ஒன்றில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். விஜய் மால்லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் விஜய் அவர்களின் அடுத்த படத்துக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

‘தளபதி 66’ படம் குறித்த தகவல்:

விஜய்யின் ‘தளபதி 66’ படத்தை வம்சி பைடிபள்ளி இயக்க இருக்கிறார் . இவர் தமிழில் ஏற்கனவே கார்த்தி, நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்த படம் எரோட்டோமேனியா ( Erotomania) நோய் பின்னணியில் எடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.

‘தளபதி 66’ படத்தில் நடிக்கும் கதாநாயகி:

தனக்கு சம்பந்தமில்லாத நபர் தன்னை நேசிப்பதாக கற்பனை செய்து கொள்வது எரோட்டோமேனியா ஆகும். இந்நிலையில் விஜய் 66 படத்தில் நடிக்க இருக்கும் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அது வேற யாரும் இல்லைங்க, தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவுக்கன்னி ராஷ்மிகா மந்தனா. இவர் விஜய்யின் தீவிர ரசிகை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஏற்கனவே இவர் விஜய்யின் மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களிலேயே விஜய்க்கு ஜோடி சேருவதாக இருந்தது. ஆனால், எப்படியோ மிஸ் ஆகிவிட்டது. இந்த நிலையில் தளபதி 66 படத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளன.

விமர்சனம் செய்யும் ரசிகர்கள்:

இது தெரிந்த உடனே ரசிகர்கள் பலரும் மீம்ஸ்களை குவித்து வருகிறார்கள். அதிலும் சிலர், ராஷ்மிகா தயவுசெய்து வேணாம். அப்படியே போட்டாலும் படம் தொடங்கி இருபது நிமிஷத்தில் அவர் கதையை முடித்துவிடுங்கள் என்றெல்லாம் விமர்சித்து கிண்டல் செய்து ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இன்று ராஸ்மிகாவின் பிறந்தநாள். இப்படி இருக்கும் நிலையில் ரசிகர்கள் விமர்சித்து வருவது மீம்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு விஜயின் படக்குழுவினரும், ராஸ்மிகா தரப்பிலிருந்தும் என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement