விஜய்யை ‘விக்’ தலனு வம்பிழுத்த பயில்வான் – சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கும் விஜய் ரசிகர்கள்

0
1382
- Advertisement -

பயில்வான் ரங்கநாதனை விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

அதில் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

- Advertisement -

பயில்வான் ரங்கநாதன் குறித்த தகவல்:

அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்தும் தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமா பிரபலங்களை பற்றி பேச ஆரம்பித்த பின் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதிலும் சமீப காலமாக இவர் நடிகைகள் பற்றி ஆபாசமாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

பயில்வான் பதிவிட்ட வீடியோ:

இப்படி தொடர்ந்து பிரபலங்களைப் பற்றி பேசி வரும் பயில்வான் சமீபத்தில் நடிகர் விஜய்யை பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது, விஜய் 7 வருடத்திற்கும் மேலாக படங்களில் விக் வைத்து தான் நடித்து வருகிறார். அவருடைய தந்தை வயதானாலும் அவருக்கு முடி உதிராமல் இருக்கிறது, ஆனால், விஜய்க்கு இந்த வயதிலேயே முடி உதிர்ந்து இருக்கிறது. அதற்கு காரணம் அவர் பயன்படுத்தும் ரசாயனம் கலந்த ஷாம்புகள் தான்.

-விளம்பரம்-

விஜய் முடி குறித்து பேசியது:

உலக நாயகனுக்கும் இது போன்ற பிரச்சனை இருந்தது. ஆனால், அவர் சுதாரித்துக் கொண்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று முடியை மீண்டும் வளர்த்துக் கொண்டார். ரஜினிக்கும் முடி கொட்டி விட்டது. ஆனால், அவர் அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் வலுக்கை தலை உடனே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஆனால், விஜய் விக் வைத்துக் கொண்டு தான் வலம் வருகிறார். விக் வைப்பது தவறில்லை. சினிமா பிரபலங்களுக்கு அது ஒரு சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது.

வறுத்துஎடுக்கும் விஜய் ரசிகர்கள்:

ஆனால், விஜய் விக் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். விஜய் விதவிதமான விக்கை பயன்படுத்தி இருக்கிறார். தயவு செய்து ஒரே வீக்கை வைத்து பழகுங்கள். உதாரணத்திற்கு பனைப்பூரில் ரசிகர்களை அண்மையில் சந்திக்க வந்த போது நீண்ட முடிவுடன் கூடிய விக் விஜய் அணிந்து வந்திருக்கிறார் என்று விஜய் பற்றி தாறுமாறாக பேசியிருக்கிறார். இதை பார்த்த விஜயின் ரசிகர்கள் கடுப்பாகி ரங்கநாதனை வெளுத்து வாங்கி வருகிறார்கள். சிலர், விஜய் தெறி பட சமயத்திலேயே முடிக்கு சிகிச்சை எடுத்து வளர்த்துக் கொண்டார். ஒரிஜினல் முடிக்கும் விக்கிற்க்கும் வித்தியாசம் தெரியாமல் பேசாதே. உனக்கு அவ்வளவு தான் லிமிட் என்று சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement