தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கொரோனா பிரச்சனைக்கு நடுவே வெளியான போதிலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் பல கோடிகளை குவித்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது.

Advertisement

பீஸ்ட் படத்தை விஜய் அடுத்து நடிக்க இருக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜூ தயாரிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தெலுங்கில் ஏராளமான வெற்றி படங்களை இயக்கிய வம்ஷி இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு விஜய்யின் சம்பளம் ரூ.120 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகிறார்.

இதையும் பாருங்க : முதன் முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஜேம்ஸ் வசந்தன் – அட, இதுலையும் செம ஸ்மார்ட்டா இருக்காரே.

விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரூ.300 கோடி லாபம் கிடைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏஜிஎஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் திடீா் சோதனை செய்தனா்.

Advertisement

சோதனைக்கு பின்னர் விஜய் வருமான வரி துறை அலுவலகத்தில் நேரிலும் ஆஜராகி விளக்கமளித்தார். அதே போல அப்போது நடிகர் விஜய்யின் சம்பள விவரங்களையும் வருமான வரி அதிகாரிகள் வெளிப்படுத்தி இருந்தது. நடிகர் விஜய்க்கு பிகில் படத்திற்கு ரூ .50 கோடியும், இறுதியாக வெளியான ‘மாஸ்டர்’ படத்திற்கு 80 கோடியும் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியானது என்பது கூறிப்பிடதக்கது.

Advertisement
Advertisement