நண்பர்களுக்கு போன் செய்ய சொல்லி பிராங்க் செய்துள்ள விஜய். இந்த வீடீயோவை பாருங்க.

0
19808
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது.

-விளம்பரம்-
Image result for vijay with his friends

இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், சில தினங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் அவர்களை வருமான துறையினர் சோதனைக்காக அழைத்து சென்றார்கள். இது சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகர் தீனா அவர்கள் விஜய் தன்னிடம் கூறியதை நிகழ்ச்சி ஒன்றில் கூறி உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தீனா.

- Advertisement -

இதையும் பாருங்க :பள்ளியில் படிக்கும் போது கேலி கிண்டல், 13 வயதில் நாடகத்தில் பப்புன் வேடம் – வேதனைகளை பகிர்ந்த கிங் காங்.

மேலும், தொலைபேசியின் வழியாக விஜய் டிவியின் முக்கிய விருந்தினர்கள் உட்பட அனைவரையும் கலாய்த்து வந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனாலேயே இவரை பிராங்க் கால் தீனா என்று தான் அழைக்கிறார்கள். இதனால் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்தது என்றும் சொல்லலாம். இவர் முதலில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கைதி படத்தில் காமாட்சியாக தீனா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து. தற்போது தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தீனா நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தீனாவுக்கு விருதும் வழங்கப்பட்டது. அப்போது அவரிடம் விஜயுடன் மாஸ்டர் படத்தின் போது உங்களுக்கு நிகழ்ந்த அனுபவம் பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு தீனா கூறியது, விஜய் சார் என்னை முதலில் பார்க்கும் போது அது நீ தானே என்று சொன்னார். நானும் கைதி படம் காமாட்சி நான் தான் சார் என்று சொன்னேன். அதற்கு அவர் அது இல்லை பிராங்க் கால் செய்வது நீதானே என்றார். நானும் ஆமாம் சார் என்று நான் சொன்னேன். பின் என்னுடைய சிறந்த எபிசோடுகள் எல்லாம் அவரிடம் காட்டினேன். உடனே அவர் எனக்கு நிறைய பேருக்கு கால் செய்ய வேண்டும் என்று கூறினார். மீதி விஷயங்களை எல்லாம் படம் ரிலீசுக்கு பிறகு கூறுகிறேன் என தீனா கூறினார். இப்படி தீனா பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement