தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய பெயரில் நிறைய ரசிகர் மன்றமும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் ஆங்காங்கே விஜய் ரசிகர் நற்பணி மன்றங்கள் மூலம் விஜய் ரசிகர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அதே போல நடிகர் விஜய்க்கு ரசிகர்களை போல ரசிகைகளும் அதிகம் தான்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர்மகேந்திரன் , சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

Advertisement

இந்நிலையில், சென்னை அருகே பனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை செயலகத்திற்கு விஜய் சென்றிருக்கிறார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜய் திடீரென இந்த கூட்டத்துக்கு வருகை தந்தார்.விஜய்யின் திடீர் வருகையை எதிர்பாராத ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இது தொடர்பான போட்டோக்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எதற்காக பனையூரில் கூட்டம் நடைபெற்றது? என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும், விஜய்யை கண்ட மகிழ்ச்சியில் குஷியில் ஆழ்ந்த சில ரசிகர்கள் விஜய் கார் கண்ணாடியில் முத்தமிட்டனர். அதே போல விஜய் வந்த காருக்கு உள்ளே ஒரு சிலை ஒன்றும் இருந்தது. அது என்ன சிலை என்று உற்றுப்பார்க்கையில் அது மாஸ்டர் படத்தின் சிலை என்பது தெரிய வந்தது.

Advertisement
Advertisement