தாமிரபரணி பட நடிகை பானுவா இது.! கடைசில அவருக்கு வந்த நிலைமையை பாருங்க.!

0
2520
banu
- Advertisement -

தாமிரபரணி பட நடிகை பானு 1991ஆம் ஆண்டு கேரளாவின் கொளஞ்சேரி என்னும் ஊரில் பிறந்தவர். இவருடைய அப்பா பெயர் ஜார்ஜ், அம்மா பெயர் சாலி. ஒருகாலத்தில் மலையாளத்தில் நயன்தாரவிற்கு இணையாக போற்றப்பட்டவர் இந்த பானு. இவர் சிறு வயதில் இருந்தே திரைத்துரையில் இருக்கிறார். 

-விளம்பரம்-

தான் 6வது படிக்கும் போது, மலையாள சீரியலில் நடித்தார் பானு. அதன்பின்னர் தன்னுடைய 14 வயதில் அச்சனுரங்காத வீடு என்னும் மலையாள படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார் பானு. இவருக்கு முக்தா என்னும் ஒரு பெயரும் உண்டு. 

- Advertisement -

அதன்பின்னர் தனது ஹீரோயின் வாழ்க்கையை துவங்கினார் பானு. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 30க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார் பானு. தமிழில் 2007ஆம் ஆண்டு தனது 16 வயதில் தாமிரபரணி படத்தில் நடித்தார். இதிலிருந்து இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது. 

பின்னர் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்ப்பர்க்கப்பட்ட இவர் அதன்பின்னர் அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர் என ஒரு சில சுமாரான படங்களில் மட்டுமே நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த பானு தற்போது ராதிகா நடித்துள்ள வரலாற்று சீரியலான சந்திரகுமாரியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement