அந்த நடிகர் வேண்டாம் ! சிவா சொல்லியும் வேண்டாம் என்று மறுத்த இயக்குனர் ! கடுப்பில் நடிகர்

0
5291
Actor Sivakarthikeyan
- Advertisement -

நடிகர் சிவ கார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.மேலும் படத்தை அடுத்து நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படம் ஒரு சய்ன்ஸ் பிக்க்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Sathish

ஓரு இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்னும் படபிடிப்பே துவங்கபடாதா இந்த படத்தை ஒரு பிரபல தொலைக்காட்சி ஒன்று பல கோடி கொடுத்து ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ளது என்று ஏற்கன்வே தகவல் வந்தது.தற்போது இந்த படத்தில் நடிக்கப்போகும் நடிகர்களை படக்குழு தேர்வு செய்துவருகிறது. மேலும் சிவகார்திகேயன் படம் என்றால் காமெடி காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும் மேலும் சிவகார்த்திகேயனுக்கு இணையாக ஒரு நடிகர் இருந்தால் அதில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அப்படி சிவகர்திகேயனுடன் எதிர் நீச்சல்,மான் கராத்தே போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் சதீஷ், சிவகார்த்திகேயனுக்கு காமெடியில் ஒரு நல்ல பார்ட்னர் என்ரே கூறலாம் மேலும் இவர் சிவகார்த்திகேயனின் நல்ல நண்பர் என்றே கூறலாம்.

- Advertisement -

இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ஆர். ரவிக்குமார் இயக்கும் அந்த படத்தில் சதீசை காமெடியனாக போடுவதற்கு இயக்குனரிடம் பரிந்துரை செய்துள்ளார்.ஆனால் அவரோ சதீஷா?அவரா? வேண்டவே வேண்டாம் என்று அடவடியாக கூறிவிட்டாராம். மேலும் அந்த ரோலில் காமெடி நடிகர் கருணாகரனை ஒப்பந்தம் செய்துவிட்டாரம் இயக்குனர். கருணாகரன் ஏற்கனவே இன்று நேற்று நாளை படத்தில் காமெடியனாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement